படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஜூலை, 2011

லிங்குசாமி தயாரிக்கும் 3 படங்கள்

லிங்கு சாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து மூன்று படங்களை தயாரிக்கின்றன.

லிங்குசாமி "ரன்", "சண்டைக்கோழி", "பீமா", "பையா" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

யு.டி.பி. நிறுவனம் இந்தியில் ஜோதா அக்பர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.

இரு நிறுவனங்களும் தமிழில் "வேட்டை", "வழக்கு எண் 18/9 கும்கி" என்ற படங்களை இணைந்து தயாரிக்கின்றன.

"வழக்கு எண் 18/9 படம்" செப்டம்பரில் வெளியாகிறது. பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார்.

இப் படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். வேட்டை படம் நவம்பரில் வருகிறது.

மாதவன், ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆந்திராவை கலக்கும் தமிழ் படங்கள்

ஆந்திராவில் இப்போதைக்கு லாபகரமான விடயம் நேரடியாக தெலுங்குப் படம் தயாரிப்பதல்ல.

தமிழ்ப் படங்களை அப்படியே டப் செய்வது தான்.

தமிழில் சமீபத்தில் வெளியான ”அவன் இவன்” மற்றும் ”கோ” ஆகிய இரண்டு படங்களின் வசூலும் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்களும் கடந்த இரு வாரங்களில் 16 கோடி ரூபாயை ஈட்டியுள்ளன.

பாலாவின் ”அவன் இவன்” படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தெலுங்கில் ”வாடு வீடு” என்ற பெயரில் வெளியிட்டார். தமிழில் சுமாராகப் போனாலும், தெலுங்கில் பி, சி சென்டர்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம்.

அதேபோல ஜீவா நடித்த ”கோ” படம் ”ரங்கம்” என்ற பெயரில் வெளியானது. பாடல்கள், கண்ணைக்கவரும் தளம், உருவாக்கிய விதம் என இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததால் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

தமிழ்ப் படங்களின் ஓட்டத்தைப் பார்த்த தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள், இனி இந்த மாதிரி டப்பிங் படங்களுக்கான வரியை கணிசமாக உயர்த்த வேண்டும் என கொடிபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.