தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தரம் கூட கற்கவில்லை?- விக்கிலீக்ஸ் தகவல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தர கல்வியைக் கூட கற்கவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டபோது, கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ் ரீட் 2005 நவம்பர் 21ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இரகசியமான தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அந்த தகவல் பறிமாற்றக் குறிப்பிலேயே, மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தரம் கூட படிக்கவில்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

க.பொ.த உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யாத மகிந்த ராஜபக்ஸ இப்போது ஒரு சட்டவாளர் என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருடைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் எட்டுப் பிள்ளைகளில் மூன்றாவதாக, பேர்சி மகிந்த ராஜபக்ச 1945 நவம்பர் 18ம் நாள் வீரகெட்டியவில் பிறந்தார்.

காலி றிச்மன்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு நாலந்தா மற்றும் தேஸ்டன் கல்லூரிகளிலும் கல்வி கற்ற போதும் அவர் க.பொ.த உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை.

இருந்தபோதும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நூலகத்தில் எழுதுனராக பணியாற்றிய அவர், 1970ம் ஆண்டு தனது தந்தையாரின் மறைவுக்குப் பின், அரசியலில் இறங்கி அவரது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகைமை தேவையில்லை என்று அப்போதைய சட்ட அமைச்சர் கொண்டு வந்த நடைமுறையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ஸ கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.

1974இல் அவர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றதாகவும் அமெரிக்கத் தூதுவர் தனது தகவலில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Content of Popup

ஞாயிறு, 17 ஜூலை, 2011

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வில் தகவல்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது அளவுக்கு அதிகமாக புகை பிடிப்பதைவிட ஆபத்தானது என மிரட்டுகிறது புதிய ஆய்வு.

லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் நடத்திய இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு.

இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும், மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

அதாவது ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம்.

அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம்.

அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்.

வியாழன், 14 ஜூலை, 2011

பாலாடைக்கட்டி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்

பெரும்பாலானவர்கள் தங்கள் உணவில் பாலாடை கட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் பையில் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். சிறுநீர் பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 200 பேரிடமும், புற்று நோய் பாதிக்காத 386 பேரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் தினமும் 53 கிராம் பாலாடை கட்டியை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு சிறுநீர் பை புற்றுநோய் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 53 கிராமுக்கும் அதிகமான சொக்லேட் சாப்பிட்டு வந்தனர்.

அதில் சேர்க்கப்பட்டிருந்த பாலாடை கட்டியால் இது உண்டானது தெரியவந்தது. அதே வேளையில் அதிக அளவு ஆலிவ் ஆயில் சேர்ப்பவர்களுக்கு பலவித நோய் பாதிப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலுக்கு மோசமான விளைவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு தவிர்க்கப்படும், உடல் எடை குறையும் மற்றும் நினைவுத்திறன் அதிகரிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தினமும் 3 கோப்பை தண்ணீரை அருந்துவது சரியல்ல என கிளாக்சோவை மையமாக கொண்ட ஜி.பி.மார்க்ரேட் கூறுகிறார்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து மிகைப்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தண்ணீர் குடிப்பது இரவில் நேரத்தில் சரியல்ல என்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடிப்பதும் சரியல்ல என்றும் அவர் கூறுகிறார்.

பிரிட்டன் தேசிய நலவாழ்வு சேவை ஆலோசனைப்படியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படியும் தினமும் 1-2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

உடலில் கலோரிகள் அதிக அளவில் எரிக்கவும் உடல் எடை குறையவும் தண்ணீர் உதவுகிறது. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படுகிறது. இந்த தலைவலியை போக்குவதற்கு தண்ணீரை போதிய அளவு குடிக்க வேண்டும். சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

நகங்களின் தன்மையை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. தோல் வறட்சி அடையாமல் தடுக்கவும் தண்ணீர் உதவுகிறது என்றும் தண்ணீரின் பலன் குறித்த முந்தய ஆய்வுகள் கூறுகின்றன.