ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இந்தியாவின் கைத்தொழில் நிறுவனங்களினால் இலங்கைக்கு பாதிப்பு

இந்தியாவின் பல்வேறு கைத்தொழில் நிறுவனங்களிலிருந்தும் வெளியாகும் விஷ வாயுக்களினால் இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சபரகமுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளியிடப்indiaபட்டுள்ளது.

ஹோர்டன் சமவெளி உள்ளிட்ட நாட்டின் மலைப் பிரதேசங்கள் மாசடைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கருத்திற் கொண்டு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வாயு மண்டலம் விஷ வாயுக்களினால் நிரம்பியுள்ளதாக சபரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக