ஞாயிறு, 17 ஜூலை, 2011

தெய்வத்திருமகளின் கதை என்னை பாதித்தது: அமலா பால்

"தெய்வத்திருமகள்"  படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டு இருப்பேன் என்று கூறுகிறார் நடிகை அமலா பால்.

"வீரசேகரன்" படத்தின் மூலம் அறிமுகமாகி, "மைனா" படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த அமலா பால் தன்னுடைய அழகான கண்களாலும், அசாத்திய நடிப்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு படி மேலே சென்றுவிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த "தெய்வத்திருமகள்" படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஸ்வேதா எனும் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்திருந்தார்.

படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அமலா பால் நடித்திருந்தாலும், இப்படத்தில் நடித்ததை பெருமையாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"தெய்வத்திருமகள்" படத்தின் கதையை கேட்டதும், என்னை மிகவும் பாதித்தது.

பாடலில் இல்லை‌யென்றோ, அதிகமான காட்சிகளில் இல்லை என்றோ நான் வருத்தப்படவில்லை.

இந்த ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் யார் நடித்திருந்தாலும் பேசப்பட்டிருப்பார்கள்.

இந்த படத்தில் நான் நடிக்காமல் மிஸ் பண்ணியிருந்தால் சினிமாவில் இருக்கும் வரை வருத்தப்பட்டிருப்பேன்.

படத்தில் சில காட்சிகளில் கிளிசரின் போடாமலே நான் அழுதுவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை என்னை பாதித்தது, இவ்வாறு அமலா பால் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக