ஹோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமூக அக்கறை, சீர்திருத்த கருத்துக்களை பரபரப்பாக உதிர்ப்பார் தங்கர் பச்சான்.
சமீபத்தில் இயக்குனர் தங்கர் பச்சான், பெயருக்கு பின்னாடி ஜாதி பிரிவின் பெயரை போட்டுக்கொள்வதை எதிர்த்து கருத்து பேசியுள்ளார்.
பட உலகில் கூட சிலர் தங்களின் பெயரோடு ஜாதி பேரையும் சேர்த்துள்ளார்கள்.
மக்களை அந்நாளில் குழுக்களாக பிரித்து வைக்க ஜாதி பேரை இப்படி பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் பேசினாராம் அவர்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும்போது படத்தின் நாயகியாக நவ்யா நாயர் நடித்திருந்தார்.
அப்போது நாயகி நவ்யா தனது பெயருக்கு பின்னால் 'நாயர்' என்பதை சேர்க்க கூடாது என எதிர்த்தாராம்.
இப்போதும் பட உலகில் பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயரை இணைத்து கொள்வது பற்றியும் குமுறலை கொட்டி தீர்த்தாராம்.
தமிழகத்தில் உள்ள தெருக்களின் பெயர்களோடு ஒட்டியிருக்கும் ஜாதிப்பெயரை நீக்க சொல்லியும் குரலை உயர்த்தியுள்ளாராம் இயக்குனர் தங்கர் பச்சான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக