இயக்குனர் ஏ.எம்.பாஸ்கர் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ச்சனா சர்மா நடிக்கிறார்.
புதிய படம் குறித்து இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், மலை பிரதேசங்களில் அமைந்திருக்கிற தற்கொலை பாறைகளுக்கு வாயிருந்தால் ஓராயிரம் கதைகளை சொல்லும்.
இதில் பாதி கதைகள் காதல் கதைகளாக தான் இருக்கும். மலை பிரதேசங்களில் நடக்கும் இளம் ஜோடிகளின் தற்கொலை எல்லாம் நிஜமாகவே தற்கொலை தானா? என்ற கேள்வியை எழுப்புவதுதான் ”ஒத்திகை” படத்தின் அழுத்தமான கதை.
நான் சேகரித்த நிஜ தகவல்களின் அடிப்படையில் இந்த கதையை அமைத்திருக்கிறேன்.
சமுதாயம் தற்கொலை என்று நினைத்து கவலைப்படும் பல சாவுகள், தற்கொலையல்ல, கொலை என்ற அதிர்ச்சியை என்னுடைய ஒத்திகை கிளப்பும் என்றார்.
நல்ல கதையா இருந்தா மட்டும் தான் மற்றவங்களுக்கு கால்ஷீட் கொடுப்பேன் இல்லன்னா நானே இயக்கி நடிப்பேன் என்று கூறுகிறார் நடிகர் ஜெய் ஆகாஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக