திங்கள், 18 ஜூலை, 2011

கன்னியாகுமாரியை பற்றி கூறும் படம்

கரண் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’  இப்படத்தினை வடிவுடையான் இயக்குகிறார் ‘அங்காடித் தெரு’ புகழ் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர். இன்று முதல் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின்றன.

வைரமுத்துவின் வரிகளுக்கு குமரி மாவட்டத்தின் பாரம்பரிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருக்கிறார் வித்யாசாகர்.

பாடல்களும், இசையும் புது அனுபவமாக இருக்கும் என இயக்குநர் தரப்பு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தின் கதை கேரள எல்லைப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய மனிதராக வாழ்ந்தவர் வெட்டோத்தி சுந்தரம்.

இவரின் வாழ்வை மையமாக வைத்து தான் வடிவுடையான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் குறித்து வடிவுடையான் கூறியதாவது:

தனி மனிதனின் வாழ்வியல் பதிவாக இந்தப் படம் உருவாகியுள்ளதால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில் தான் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

வளர்ச்சி மிகுந்த பகுதி இந்த மாவட்டம். தமிழகத்திலேயே படித்தவர்கள் அதிகம் பேர் இங்கு தான் இருக்கிறார்கள்.

ஆனால் 80 சதவீத குற்றங்கள் இங்கு மலிந்திருக்கின்றன. ஏன் எப்படி ஆனது என்பதற்கான பதில் தான் இந்தப் படம்.

கரண், அஞ்சலி  முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள்.

இப் படத்தில் அனைவரும் குமரி மாவட்ட வட்டார வழக்கு மொழியிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக