வெள்ளி, 15 ஜூலை, 2011

கதாநாயகனாக அறிமுகமாகும் மயில்சாமியின் மகன்

கொமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு  "பார்த்தோம் பழகினோம்" என்ற புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் ராசு மதுரவன் இயக்கும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை பொங்க நண்பர்களிடம் கூறி வருகிறார் மயில்சாமி.

ராசு மதுரவன் என்றாலே குடும்ப செண்டிமென்ட், சோகம் என்றுதான் படம் முழுக்க இருக்கும்.

அந்த செண்டிமென்ட் காட்சிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை சொல்லும் படமாக ”பார்த்தோம் பழகினோம்” படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க தன் மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி மயில்சாமி கூறுகையில், அஜீத் சார் ஒருமுறை அன்புவை பார்த்துவிட்டு தம்பி அழகாயிருக்கார் நல்ல படமா தேர்ந்தெடுத்து நடிக்க வைங்க என்று சொன்னார்.

ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குனர்களும் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லியிருக்காங்க.

அந்த நேரத்தில்தான் ராசு மதுரவன் என் மகனை பார்த்து என் படத்தில் நடிக்க வைக்கலாமே என்று கேட்டார்.

நான் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்துகொண்டு இருக்கும்போதே எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்தவர் அவர், அதனால் அவர் கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன் என்றார்.

லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அன்புவின் உண்மையான பெயர் அருமை சந்திரன்.

சினிமாவுக்காக அன்பு என பெயரை மாற்றியிருக்கும் தன் மகன் படிப்பிலும் படு சுட்டி என்று பெருமிதம் பேசுகிறார் மயில்சாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக