பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளிடம் விசாரணை ஆரம்பம்
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் »
வடக்கு கிழக்கில் நிவாரணம் நிறுத்தம் – தென்பகுதியில் 50,000 ரூபா வெள்ள நிவாரணம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் »
கிழக்கில் வெசாக்கை கொண்டாட ஆயத்தமாகும் சிறீலங்காப்படையினர்
இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப்படையினர் வெசாக் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் »
நாடு கடந்த அரசிற்கெதிரான இலங்கையின் இன்னொரு பாரிய சதி: இந்திய ஊடகங்கள் மூலம்
நாடுகடந்த அரசு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கும் இலங்கை அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான முயற்சிக்கெதிராக ஈடுபடுத்தியுள்ள பாலித கோகன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரச துணைக்குழுத்தலைவர் கருணா போன்றோரோடு தற்போது ரொஹான் குணரட்ண என்ற சிங்களப் பேராசிரியரையும் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் »
ஆறுவயதுச் சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு
சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »
பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி
புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »
விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி
நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »
இடம்பெயர்ந்தவர்களில் 25 வீதமானோர் தொடர்ந்தும் முகாம்களில்!
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 வீதமான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். 62 ஆயிரத்து 805 பேர் தொடர்ந்தும் முகாம்களில் இருப்பதாக மீள்க்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் »
இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா
இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். மேலும் »
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை – விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மேலும் »
வழக்குகளை திரும்பப்பெற்றாலே திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு – சிறீலங்கா
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் »
யாழில் இந்திய தூதரகம் – சிறீலங்கா அரசு விசனம்
யாழில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது சிறீலங்கா அரச தரப்புக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
போர்குற்றத்தினை ஐ. நா சபையால் விசாரிக்க வற்புறுத்துக – ஹிலாரிக்கு அமெரிக்ககாங்கிரஸ் கடிதம்
சிறிலங்கா அரசின் போர்குற்றத்தை ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தினை ஹிலாரி கிளிங்டன் பான் கி மூன் அவர்களிற்கு கொடுக்கவேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் »
இலங்கையின் இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும்!
இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »
விடுதலைப்புலிகள் அமைப்பினை ஓர் சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசு அறிவிப்பாம்
தமிழகத்தில் சில தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் »
சமகால இளைஞர் சமூகம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்
யுத்தம் தமிழர் வாழ்வை நாசம் செய்துவிட்டது.இவற்றின் இழப்பு சொல்லிமாளா. எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது வேறொன்று. பரவாயில்லை என்று ஆறுதல் அடையலாம். ஆனால் நடந்தது சாதாரணமானதா? இல்லவே இல்லை. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியயடுக்கப்பட்டனர். இருந்த இருப்பிடம் கூண்டோடு அழிக்கப்பட்டது. மேலும் »
முள்ளிவாய்க்காலிலிருந்து… வித்யாசாகர்
ஒரு நூறு தெரு
தள்ளி தான்
கேட்கிறதந்த சப்தம்; மேலும் »
தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் விபரங்கள் வெளியிடப்படவேண்டும்
அரச படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் முழு விபரங்களையும் அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்க வேண்டும். அப்போது தான் ஏனையோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது சாத்தியம் ஆகும் என்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் எம்.பியும் ஆன கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக