புதன், 14 ஏப்ரல், 2010

Watch Online Movie: அம்பேத்கர் – திரைப்படம்

அம்பேத்கர் – திரைப்படம்

கடந்த 2000 ஆம் ஆண்டில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த "அம்பேத்கர்" திரைப்படம் இன்னும் மக்களை சென்றடையாமல் இருக்கும் இந்நிலையில்அனைத்து மக்களிடமும் அம்பேத்கரின் வரலாற்றினை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கோடு 10 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று (2010 ஏப்றல் 14 ) அத்திரைப்படத்தினை நாம் இங்கே வெளியிடுகிறோம். மேலும் »

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக போராடிய பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள்

"எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். மேலும் »

புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம்

விடுமுறைக்கு இலங்கை செல்லும் மற்றும் அவசர தேவை கருதி இலங்கை செல்லும் இளையோர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பல இணையத்தளங்களில் படித்திருக்கிறோம். மேலும் »

போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணைமேற்கொள்ள அழுத்தம் கொடுப்போம் – பிரித்தானிய தொழிற்கட்சி

சிறீலங்காவில் கடந்த வருடம் இடம்பெற்றபோரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ள பிரித்தானிய தொழில்கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொள்ளும் என அதன் தேர்தல் விஞ்ஞரபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

சிறீலங்கா முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு

சிறிலங்காவில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் மீது பாடசாலை மாணவன் ஒருவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது தேர்தல் எமது இறுதிப்போரின் முதற்படி என்கிறார் தமிழீழ அரசின் கனடாத் தலைவர் கலாநிதி ராம் சிவலிங்கம்

மே மாதம் 2ம் திகதி நடக்கவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் உலகளாவிய ரீதியிலான தேர்தல், உலகச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும். இதுகண்டு, மனிதாபிமானத்துக்கு மதிப்பு கொடுக்கும் அத்தனை நாடுகளும் எமது சாத்வீகப் போருக்கு ஆதரவு தரவேண்டும். மேலும் »

'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை' – பிபிசி

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் »

வன்னியில் களவு தொடர்பாக சிறீலங்காப்படை மேஜர் கைது

வன்னிப்பகுதியிலிருந்த பொருட்களை களவாடிச்சென்ற சிறிலங்காப் படைத்துறையின் மேஜர் நிலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் »

இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றி விட்டதா? சிபிஐ கோரிக்கை ஏற்படுத்தும் சந்தேகம்!

தமிழீழ தேசியத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த சிறிலங்கா, அதனை இந்தியாவிற்கும் தெரிவித்து ஆவணங்களையும் வழங்கிவிட்டதாக கூறியிருந்தது. மேலும் »

இந்தியா சென்ற சிவாஜிலிங்கம் விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்காவின் அரசதலைவர் வேட்பாளராக போட்டியிட்டவருமான என்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மேலும் »

அமெரிக்கா செல்லும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிடம்; மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரனை நடத்தலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் மேலும் »

புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட தயார் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »

நேரலை அறிவிப்பு: மறைக்கப்பட்ட இனப்படுகொலை : சிறிலங்காவின் போர்குற்றம் – மாநாடு

இந்திய தலைநகர் டெல்லியில் "Unspoken Genocide: War crimes in Sri lanka" (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம் ) என்ற தலைப்பில் வரும் ஏப்றல் 15 ஆம் திகதி டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் »

அரசியல் யாப்பில் திருத்தம் கொண்டுவர அரசுக்கு பலமில்லை – ஜே.வி.பி.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் மிகக்குறைந்தளவு வாக்குகளே அரசுக்கு கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மேலும் »

இன்றும் நாளையும் மதுபானசாலைகளுக்கு மூடுவிழா

சிறிலங்கா முழுவதிலுமுள்ள மதுச்சாலைகளை இன்றும் நாளையும் மூடிவிட அரசு தீர்மானித்துள்ளது. தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் »

மக்கள் சக்தியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பலம்: நோர்வே பொதுக்கூட்டத்தில் ருத்ரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசாங்க முயற்சியினை புரிந்துகொண்ட நாடுகள் உட்கிடையான ஆதரவினை வழங்குகிறார்கள் எனவும் மக்கள் சக்தியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மிகப்பெரும் பலமெனவும் நோர்வே பேர்கன் நகரத்தில் மேலும் »

விடுதலை அரசியல் – கண்மணி

அரசியலின் பன்முகத் தன்மைகளை நாம் பகுப்பாய்வு செய்வதின் மூலமே நமக்கான அரசியலை நாம் தேர்வு செய்ய முடியும். எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கும் எனக்கும் வெகுதூரம். இந்த அரசியல்வாதிகளே எனக்குப் பிடிப்பது கிடையாது என்று சொல்பவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மேலும் »

ரட்ணசிறியே மீண்டும் பிரதமர்; நாமல் சாதாரண நா.உ

பொதுத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வருகின்ற 21 ஆம் திகதி தனது புதிய அரசாங்கத்தை உருவாக்குகிறது. மேலும் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயார்: முன்னாள் அமைச்சர் சமரசிங்க

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மேலும் »

கடும்போக்குடைய தேசிய வாதக் கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளன – அமெரிக்கா

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கடும் போக்குடைய தேசியவாதக் கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக