வெள்ளி, 16 ஏப்ரல், 2010

AUDIO: தேசியத்தலைவரின் தாயார் தமிழகத்தில் நுழைய அனுமதி மறுப்பு

தமிழ் தேசியத்தலைவரின் தாயார் அவர்கள் சென்னையில் நுழைய தமிழக அரசு அனுமதி மறுப்பு

[இரண்டாம் இணைப்பு] தேசியத் தலைவரின் தயார் அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றபோது அதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு வழங்கமறுத்து அவரை திருப்பியனுப்பியுள்ளது. இது தொடர்பாக அங்கிருந்து இயக்குநர் ராம் மீனகத்துக்கு அளித்த செவ்வி மற்றும் பழ.நெடுமாறன் அவர்களின் அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான வேட்புமனுத் தாக்கல்கள் நேற்று மாலை 9 மணிக்கு நிறைவு பெற்றது என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனேடிய தேர்தல் ஆணையாளர் கலாநிதி ஆஷ்லி மொலாய் அறிவித்துள்ளார். மேலும் »

தாயுமான எமது தலைவன் – கண்மணி

சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில், அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் »

நாவலப்பிட்டியில் மனோ கணேசனின் வாகனத்தொடரணி மீது தாக்குதல்

ஐக்கிய தேசிய முன்ணனியின் நாடாளுமன்ற வேட்பாளரும், ஐனநாயக மக்கள் முன்ணனியின் தலைவருமான மனோ கணேசனின் வாகனத்தொடரணி மீது சற்று முன்னர் நாவலப்பிட்டிய பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் »

நாடுகடந்த அரசிற்கான கனேடியத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனும் போட்டி

நாடு கடந்த அரசிற்கான கனேடியத் தேர்தலுக்காக மொத்தம் 43 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் »

அவுஸ்ரேலியாவின் ஏதிலிகள் தொடர்பான நிலைப்பாட்டிற்கு டென்மார்க் கவலை

சிறீலங்காவில் இருந்து அவுஸ்ரேலியா சென்று அரசியல் தஞ்சம்கோரும் தமிழ் ஏதிலிகள் தொடர்பில் அவுஸ்ரேலியா அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டினை அடுத்து டென்மார்க் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. மேலும் »

விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள பொடியப்பு பியசேன

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் புலிகளின் தொல்லை இருந்ததாகவும் அந்தத் தொல்லை தற்போது அரசுடன் சேர்ந்தியங்கும் இனியபாரதி போன்றவர்களால் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள பொடியப்பு பியசேன தெரிவித்துள்ளார். மேலும் »

மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 30 வருடங்களாகத் தொடர்ந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததை குறித்து நிற்கும் முதலாமாண்டு நினைவு எதிர்வரும் மே19ம் நாள் என கூறுகின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை. மேலும் »

வன்னியில் இருந்து ஒரு மடல்

நான் ஆழமாக நேசித்த உறவுகளை கடந்த வருடம் இழந்துள்ளேன். எனவே என்னால் எவ்வாறு புதுவருடத்தை கொண்டாட முடியும் என வன்னியை வசிப்பிடமாக கொண்ட உதயகுமாரி தெரிவித்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என் ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் »

பாரிஸ் – லா சப்பல் வர்த்தகர் பிரதேசத்தின் தமிழீழ ஆதரவுத் தளத்தைச் சிதைப்பதற்கான முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!

விடுதலைப் புலிகளின் களமுனைத் தோல்விக்குப் பின்னர், சிங்கள தேசத்தின் முழுக் கவனமும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஈழத் தமிழர்களைத் தோல்வி மனப்பான்மைக்குள் நிரந்தரமாக வைத்து மேலாதிக்கம் செய்வதை மட்டுமே தீர்வாக வைத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு, புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியும், போர்க் குணமும் அதைத் தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலை முன்னிட்டு நோர்வேயில் சிறப்பு வானொலி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலை முன்னிட்டு நோர்வேயில் சிறப்பு ஒலிபரப்பு (வானொலி)  இன்று வெள்ளிக்கிழமை முதல் இடம்பெறவுள்ளது. மேலும் »

டெல்லியில் குடிசைகள் அழிப்பு, நிராதரவாக வீதியில் தமிழ்மக்கள்!

டெல்லியில் தமிழர்கள் வசித்த பகுதியொன்றில்  இருந்த குடிசைவீடுகள் பல அகற்றப்பட்டு, மக்கள் வீதிகளில் விடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளதளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காம‌‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டியை முன்னிட்டு, வீதிப்புனரமைப்பில்,  பால‌ம் மேலும் »

தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்றிரவு தமக்கு அழைப்பு மேலும் »

வன்னியில் பாரிய சிறீலங்கா இராணுவத் தளம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக அங்கு மீளவும்        குடியமர்த்தப்படாத நிலையில்இராணுவமோ வன்னியின் பல பாகங்களிலும் பாரிய ராணுவத் தளங்களை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் »

யாழ் அளவெட்டியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ் அளவெட்டிப்   பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. இளவாலை வடக்கு அம்மன் கோவிலடியை சேர்ந்த 82 வயதுடைய  இளையதம்பி தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். மேலும் »

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற இராணுவ வீரர் ஒருவர் கடும் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.21 வயதுடைய திலகசிறி என்பவரே இவ்வாறு தன்னைத் தானே சுட்டதாகத் மேலும் »

முல்லையில் விவசாய நடவடிக்கையில் முன்னேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளான துணுக்காய் மற்றும் மாந்தை – கிழக்குப் பகுதிகளில் சுமார் நான்காயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் விதைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார். மேலும் »

கொழும்பு – ஐரோப்பா விமான சேவையில் மாற்றம்

ஐஸ்லாந்தில் ஏற்பட்டுள்ள எரிமலைக் குமுறுல் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான விமானசேவையில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் »

இந்தியாவைப் போன்று இலங்கையில் சமஷ்டி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் – இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். இந்தியாவைப்போல் சமஷ்டி ஆட்சி முறை அமுல்படுத்தப்படவேண்டு மென இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.ஆர்.கிருஸ்ண ஐயர் தெரிவித்துள்ளார். மேலும் »

யாழ். நகர நெருக்கடி தடுப்பதும் தவிர்ப்பதும் யார்?

பொதுத் தேர்தலுடன் சற்று ஓய்வடைந்திருந்த தென்பகுதி மக்களின் யாழ்ப்பாண வருகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தென்பகுதி மக்களின் அதீதமான வருகை குறித்து இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தோம். இருந்தும் அது தொடர்பில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக