சனி, 27 மார்ச், 2010

AUDIO: தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்

தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் தற்பொழுது முன்வைத்து வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை நகர சபையின் தலைவரும், மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் »

ஜப்பான் சிறிலங்காவுக்கு நிதியுதவி

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப்பணிகளுக்காக ஜப்பான் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதன்படி 46 பில்லியன் ரூபாயினை இலங்கைக்கு நிதியுதவியா வழங்க தமது நாடு தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் »

வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையங்களில் பணியாற்ற கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி

நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் »

குழந்தைகள் கொண்ட முழுக்குடும்பங்கள் சிறீலங்காவின் இரகசிய தடுப்பு முகாம்களில் – வட கிழக்கு மனித உரிமைக் செயலகத்தின் (NESoHR) மீள்வேண்டுதல்

முள்ளிவாய்கால் இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து மக்களும் போராளிகளும் பெரும்திரளாக வெளியேறியபோது இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். மார்ச் 16ம் திகதி இதுபற்றிய தகவல் திரட்டுவதற்காக வடகிழக்கு மனித உரிமைச் செயலகம் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தது. மேலும் »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 25- வது பட்டமளிப்பு விழா

நேற்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 25- வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. 2005,2006,2007 ஆகிய வருடங்களில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 3972 பேர் பட்டம் பெறவுள்ளனர் .யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5 வருட காலத்தின் பின்பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது . மேலும் »

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் புள்ளி விபரம் – வரதராஜன்

திருக்கோணமலைத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பலராலும் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், பொருளியல் ஆசிரியருமான சின்னத்துரை வரதராஜன் திருகோணமலையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்து விளக்குகின்றார். மேலும் »

ஐ.நா.விடம் சிறிலங்கா மீண்டும் அதிருப்தி

சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐ.நா அமைக்க தீர்மானித்துள்ள குழு தொடர்பில் சிறிலங்கா மீண்டும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மேலும் »

வருடாந்தம் ஆயிரம் சிறுவர்கள் சிறிலங்காவில் தத்தெடுப்பதற்காக விடுவிப்பு

சிறிலங்காவில் வருடாந்தம் ஆயிரம் சிறுவர்கள் தத்தெடுப்பதற்காக சிறுவர் நன்நடத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விடுவிக்கப்பபடுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது. மேலும் »

ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு தொடர்ச்சியான பாதுகாப்புக்கள் தேவை: சிட்னி மோர்னிங் ஹெரால்ட்

கடந்த பல வருடங்களாக நடைபெற்றதை போல சிறீலங்காவில் தொடர்ந்து தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதையும், அவர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பதையுமே அவர்கள் சிறீலங்காவில் இருந்து வெளியேறிவருவது காட்டுகின்றது என அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது. மேலும் »

ஐ.நா சபை தமிழினத்திற்கு நீதி பெற்றுத் தருமா?

ஈழத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி மனிதாபிமானிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் »

யாழில் இந்தியத் தூதரகம் திறப்பு – முன்னதாக திலீபனின் நினைவுதூபி தகர்ப்பு

இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன என நேற்று வெளியான ஈழமுரசு செய்தி தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியாவுக்கு எதிரான முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு சிறீலங்காவில் வேகமாக வளர்ந்து வருகின்றது: அமெரிக்கா

பாகிஸ்த்தானை தளமாக கொண்ட இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்பு சிறீலங்காவில் வலுவாக காலூன்றியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது. மேலும் »

நீங்கள் எதுவும் சொல்லலாம் ஆனால் "ஒற்றுமை" அவசியம்

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அன்பிற்குரிய வேட்பாளப் பெருமக்களே! தேர்தலில் வெற்றிபெறு வதற்காக நீங்கள் எடுக்கும் பகீரதப் பிரயத்தனம் கண்டு மனம் நெகிழ்கிறது. மேலும் »

இது தமிழனுக்கான அரசா…?

உலகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக் காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக் கடலில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260-க்கும் அதிகமான தமிழர்கள் 'எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என அனைத்துலகம் நோக்கிக் கையேந்தி நிற்கின்றனர். மேலும் »

பொன்சேகா முட்டாள் அல்ல மஹிந்தவுக்கு பொன்சேகா அணி பகிரங்க மடல்

பொன்சேகாவை முட்டாள் என மஹிந்த சிங்கப்பூர் பத்திரிகைக்கு செய்தி வழங்கி இருந்தார். அதற்கு பதில் வழங்கும் முகமாக பொன்சேகா ஊடகப்பிரிவு கடிதம் ஒன்றினை மஹிந்தவுக்குமனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பொன்சேகா உங்களைப்போல் எங்களைப்போல் முட்டாள் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் »

சிங்களவர்கள் எங்களது கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வருகிறார்கள் – தீபச்செல்வன்

கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன். ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன். இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்று பயங்கரம்தான் மிகுந்திருக்கிறது. மேலும் »

ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்க முடியாது, இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் – திருமலை வேட்பாளர் கண்மணி அம்மா

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞர்களை தெரிவு செய்வதன் ஊடாக தமது தாயகக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக கண்மணி அம்மா இரத்தினவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

திலிபன் தமிழ் வீரத்தின் அடையாளம் – கண்மணி

பேயாட்டம் போடும் மகிந்தாவின் அரசுக்கு முடிவுரைக்கான காலம் இதோ நெருங்கிவிட்டது. துட்டகைமுனியின் தொடராய் மகிந்தாவின் அக்கிரமங்கள் இதோ அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மேலும் »

வன்னியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினர்!

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி  அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

சுயநலமான அரசியல் தலைமைகளை புறக்கணித்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் – வைத்திய கலாநிதி திருலோகமூர்த்தி

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகின்றது.இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி கொக்குவில் பொற்பதி இந்து  விளையாட்டு கழகத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக