கலாநிதி கென்னடி விஜயரத்தினத்தின் செவ்வி
யாழ் மாவட்டத்தின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கான வேட்பாளர் கலாநிதி கென்னடி விஜயரட்ணம் அவர்கள் லண்டன் ஐபிசி வானொலிக்கு வழங்கிய செவ்வி. மேலும் »
மீள் குடியேறுவோருக்கு இனி 10 தகரம் மட்டுமே, UNHCR பண உதவி நிறுத்தம்
மீள் குடியேறும் மக்களிற்கு என வழங்கப்படும்10,000 பணம் ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே மீள் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. மேலும் »
மட்டுவில் மாணவர்கள் அருந்திய உணவில் நஞ்சுத்தன்மை 112 மாணவர்கள் ஆபத்தான நிலையில்
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சோலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய உணவில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் ஆபத்தான நிலையில் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் »
விடுதலைக்காற்று… – இளமாறன்
நம் மக்களின் வலியினை சொல்ல இளம் இயக்குநர் இளமாறன் இயக்கத்தில் நிரோசன் நடிப்பில் விடுதலைக்காற்று குறும்படம்… மேலும் »
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள் பாடகர் அகோனை சிறிலங்காவுக்கு அழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது அரசாங்கமே ‐ மனமேந்திரா
சிறிலங்காவில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல ஆங்கில பொப்பிசைப் பாடகர் அகோனை சிறிலங்காவுக்கு அழைத்து வரும் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது மகிந்த ராஜபக்சே அரசாங்கமே என ஜனநாயக தேசியக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் மனமேந்திரா தெரிவித்துள்ளார். மேலும் »
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது!
மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன. மேலும் »
வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!வளமாகட்டும் திமுக
தமிழ்த்திரையுலகை திமுக ஆக்கிரமித்து வருவது தமிழுக்கு நல்லது என "உடன்பிறப்புகள்"கலைஞர் புகழ்பாடிவரும் வேளையில்,கலைஞரின் அரசியல் வாரிசுகள் எப்படியெல்லாம் திரையுலகில் தமிழை வளர்க்கிறார்கள்(!) என்று பார்க்கலாம்! மேலும் »
ஐ.நா ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் தெரிவு ஆரம்பம்! குழுவில் இடம்பெற அகாஷி மறுப்பு?
சிறிலங்கா அரசு வன்னிப்போரின் இறுதி நாட்களில் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்குமென ஐ.நா செயலாளர் நாயகம் முன்னெடுத்துவரும் ஆலோசனைக்குழு அமைக்கும் முயற்சிகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் »
அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை
இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் »
யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள், அவர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டார்கள். இப்படிப் பல விடயங்கள் தமிழர்களை இவ்வளவு அழிவு கட்குப்பின் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் »
ஐ.நா. நிபுணர் குழு நியமனம் குறித்து கொஹணேவிற்கும், விஜய் நம்பியாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை – பான் கீ மூன்
சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் செயலாளர் நாயகம் அமைக்கவுள்ள ஆலோசனைக்குழுவுக்கான பணிகள் தொடர்பில் ஐ.நாவின் அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் சிறீலங்கா பிரதிநிதி பாலித கோகன்னா ஆகியோர் பேச்சுக்களை நடத்திவருவதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம் திவயின பத்திரிகை செய்தி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நினைவுச் சின்னங்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »
இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு
சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அந்தந்த அலுவலகங்களில் அத்தாட்சிப்படுத்தப்படும் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது. மேலும் »
சிறிலங்கா வந்துள்ள வங்களாதேச இராணுவ குழு வடபகுதிக்கு விஜயம்
சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வங்களாதேச உயர்மட்ட இராணுவ குழு இன்று வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உயர்மட்ட இராணுவ குழு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள வங்காளதேஷ் தூதரகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும்; கொள்கைக்கான தெரிவைத் தீர்மானிக்கும் நேரம்
இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு. சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது. மேலும் »
தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன?
நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்தவர். அவரின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இவையெல்லாம் இங்கு வியாக்கியானம் செய்யப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. மேலும் »
நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
ஈகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டித்து தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் »
வன்னியில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது ?
சிறிலங்காப் படையினரின் இறுதிக்கட்ட தமிழின அழிப்பு போர் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினரும் உதவியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் »
சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம் – ஆதரவை விலக்க ஆயத்தமாகும் இந்தியா மற்றும் சீனா
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒருவரையறைக்கு அப்பால் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் இந்தியா, சீனா உட்பட சிறிலங்காவுக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகை பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
இந்தியா என்ற அடித்தளம் உருக்குலைந்த பிரமாண்டத்தைக் கண்டு அஞ்சுவதும், அதைத் தொழுவதும் கடைந்தெடுத்த ஈனத்தனம்!
தமிழ் தேசியம் வேறு, கட்சி அரசியல் வேறு என்பதைத் தற்போதும் சிலர் மறுதலித்து வருகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களுக்கானது. அதில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் என்பதே கிடையாது. தமிழ்த் தேசிய நலன் சார்ந்து எதையும் இழக்க, எதையும் எதிர்கொள்வதற்கான தியாக சிந்தனை உள்ளவர்களே தமிழ்த் தேசிய சிந்தனை வாதிகளாக இருக்க முடியும். மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக