சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்காவுக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
விரிவு… »தமிழின தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அவரது மரணச் சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும் என்று கூறியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரித்ததாக 1989 இல் தொடரப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு செய்தி இணையத் தளங்களை சிறீலங்காவில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[படம்] யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறிலங்காவின் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை முற்றாகத் தடைசெய்வதற்கான புதிய சுற்றறிக்கை ஒன்று சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முறையான சட்டங்கள் இல்லாவிட்டால் இராணுவத்தை கட்டுப்படுத்த முடியாது என சிறிலங்காவின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிக்கின்றார். அதன் அடிப்படையின் இராணுவ சட்டங்கள் மூலமே ஜெனரல் சரத் பொன்சேகா மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவிக்கின்றார். அக்கட்சியின் பொதுக்குழுக்ககூட்டத்தில் உரையாற்றுகயையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கு குடும்பத்தில் ஒருவருக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை நாட்டில் பலத்த சர்ச்சைகளையும், பதற்றத்தையும் தோற்றுவித்திருக்கின்றது என்பது மறைக்கப்பட மறுக்கப்பட முடியாத உண்மை.
"கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீது, ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தப்படும். அவருக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே,"பொன்சேகாவின் உயிருக்கு இலங்கை அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை நாட்டில் பலத்த சர்ச்சைகளையும், பதற்றத்தையும் தோற்றுவித்திருக்கின்றது என்பது மறைக்கப்பட மறுக்கப்பட முடியாத உண்மை.
யாழ் பல்கலைகழகத்தில் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் தலையீடுகள் இருந்து வருவதையிட்டு மாணவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இறுதியாக நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ள மாணவர்கள் சிறிலங்கா படையினர் தலையீடு எந்த அளவில் தமது பல்கலை நடவடிக்கைகளில் காணப்படுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று பொதுமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது அரசின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சிறிலங்கா காவற்துறையினர் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி இன்று கொழும்பு நீதிமன்றம் சிறிலங்கா காவற்துறையை கண்டித்துள்ளது.
வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதாகோவில் சிறீலங்கா படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி கைதின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியா ஆகியவற்றின் கரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காடுகளில் ஒளிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
தனது கணவரான முன்னாள் இராணுவ தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான செனரல் சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணான வகையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி அனோமா பொன்சேகா உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தார்.
சிறிலங்காவில் இருந்து சிங்கள வியாபாரிகள் தினமும் மரக்கறிவகைகளை பெருமளவில் யாழ்ப்பாணம் எடுத்துச்செல்வதால் உள்ளுர் உற்பத்தி மரக்கறி வகைகளைச் சந்தைப்படுத்த முடியாமல் யாழ்.குடாநாட்டு விவசாயிகள் பெரிதும் திண்டாடுகின்றனர்.
தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய 19 தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.
மிருசுவில் கெற்பேலி என்ற இடத்தில் நிலத்தில் புதைந்திருந்த மர்மப் பொருளை எடுத்து உடைத்தபோது அது வெடித்ததில் சிறுவன் காயமடைந்துள்ளான். சபாபதி சாரங்கன் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக