ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

[3ஆம் இணைப்பு] சாதிவெறிபிடித்த தமிழர்களால் ஒடுக்கப்படும் ஆதித்தமிழர்கள்

சாதிவெறிபிடித்த தமிழர்களால் ஒடுக்கப்படும் ஆதித்தமிழர்கள்

பதிந்தவர்_மீனகம் on February 27, 2010
பிரிவு: காணொளி, பிரதானச்செய்திகள்

[3ஆம் இணைப்பு ஆடியோ] தமிழினத்திலே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் ஆதித்தமிழர்களான அருந்ததிய மக்களின் முன்னேற்றத்தினை தடுக்க தலித் தலைவர்களே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும் அருந்ததிய மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.

ஒடுக்கப்பட்டவனுக்கே ஒடுக்கப்பட்டவனின் வலியானது முழுமையாக தெரியும் என்பதற்கினங்க தமிழீழ மக்களுக்காக தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியவர்கள் தமிழக சாதிவெறியர்களால் ஒடுக்கப்பட்ட மக்களான ஆதித்தமிழர்கள்.

தமிழினத்தில் இருக்கும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடிவரும் அம்மக்கள் அதே வேளையில் தமிழீழ மக்களுக்காகவும் எவ்வித அரசியல் சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் போராடிவருகின்றனர்.

தலித் மக்களை ஓட்டு இயந்திரமாகவும் , வெளிநாட்டில் பணம் பெற உதவும் பொருளாகவும் தலித் மக்களை சில தலித்திய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வைத்திருக்கும் நிலையில் பல்வேறு கொடுமைகளுக்கு இடையிலும் இலங்கைக்கு கொண்டு செல்லவிருந்த இந்திய ராணுவத்தளவாட  சென்ற வாகனத்தினை தாக்கிச் சிறை சென்றவர்களில் அருந்ததிய மக்களும் அதிகம், பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரோடு ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் நீலவேந்தன் உட்பட பல அருந்ததிய இன மக்களும் அடங்குவர்.

இவ்வாறு தமிழகத்தில் ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் அருந்ததிய மக்களுக்காக போராடி வரும் அமைப்புகளில் ஒன்றான ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியினை இங்கே இணைத்துள்ளோம்.

மீனகம் வாசகர்களுக்காக செவ்வியின் வரி வடிவம்:

அருந்ததியினருக்கான இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலித் அமைப்புகள் மனு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

இது உண்மையிலேயே சம நீதிக்கு சமூக நீதிக்கு எதிரான இந்துத்துவ கருத்தை உள்வாங்கிய தலைவர்களின் ஒரு போக்கு.  உண்மையான தலித் தலைவர்கள் என்ற அவர்களின் முகத்திரை இன்று கிழிபட்டிருக்கிறது.   தலித்துகள் என்று சொன்னாலே செருப்பு தைப்போர், மலம் அள்ளுவோர் என்ற நிலையே தமிழ் நாட்டில் இருக்கிறது.  ஆனால், இதில் அதிகமானோர் அருந்ததியினர்.

இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தலித் தலைவர்களாக முன்வந்த அந்த தலைவர்கள் இன்றைக்கு இதற்கு எதிராக நிற்கிறார்கள்,  தமிழ் நாட்டில் 1/3 பங்கினர் அருந்ததியினர் இருக்கின்றார்கள்.  ஆனால், இவர்களின் பங்கு அரசியலிலும், பொருளாதாரத்திலும், தரத்திலும் பின் தங்கிய நிலை தான் காணப்படுகிறது.

இவர்களின் நிலையை அறிந்த தமிழக முதலைமைச்சர் இவர்களை கைதூக்கி விடுவதற்காக தான் இந்த உள்ளிட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார்.  இந்த உள்ளிட ஒதுக்கீடு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கூடி ஓய்வு பெற்ற நீதிபதி அவர்களின் ஆலோசனையில் அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் முறையாக இன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கிற ஒதுக்கீடுகள் அனைத்துமே உள்ளிட ஒதுக்கீடுகள் தான்.  பார்ப்பனர்கள் முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்ததை மாற்றி சூத்திரர்கள் என்று சொல்லப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாங்கியதும் உள்ளிட ஒதுக்கீடு தான்.  அதற்கு பின் பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டதும் உள்ளிட ஒதுக்கீடு தான்.  மீண்டும் அதிலிருந்து வன்னியர்கள் போராடி ஒரு ஒதுக்கீட்டை பெற்றார்கள் அதுவும் உள்ளிட ஒதுக்கீடு தான்.

அதே போல முஸ்லீம்களிற்கும் இன்று கொடுக்கப்பட்டிருக்கிறது அதுவும் உள்ளிட ஒதுக்கீடு தான்.  இதை எல்லாம் எதிர்க்காத இந்துத்துவம் உருவாக்கிய இந்த போலி தலித் தலைவர்கள் இன்றைக்கு அருந்ததியினர் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மிகவும் வேடிக்கையானது மட்டுமல்ல இவர்களெல்லாம் அம்பேத்கார் அவர்களின் கீழ் இல்லை என்பதை தெளிவாக காட்டிவிட்டார்கள்.  இதை ஆதித்தமிழர் பேரவை கடுமையாக எதிர்க்கும்.  அதே நேரத்தில் அவர்கள் சட்டப்படி சென்றால் நாமும் சட்டப்படி சென்று அதற்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கோ நாடுவோம்.  இந்த விடயத்தில் கலைஞர் அவர்களின் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

உள்ளிட ஒதுக்கீடு திட்டம் அமூலில் இருக்கிறதா?

ஒரு வருடமாக நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் அதை அனுபவிக்கிறார்கள்.

"உள்ளிட ஒதுக்கீடு தலித் மக்களை பிரிக்கும் செயல்" இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

தலித் மக்கள் என்று பொதுவாக பேசுகிறார்களே தவிர கிராமங்களிலே சங்கிலியர் சேரி, பறையர் சேரி, பள்ளர் சேரி என்று தனித்தனியாகத்தான் இருக்கிறார்களே தவிர ஒன்று படவில்லை. இந்த மூன்று சமூகத்தினருக்கும் இயல்பாக திருமண உறவு கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி வந்தது ஒற்றுமை.

இப்போது தான் அவர்களின் உண்மையான உரிமையை பெறும்போது எங்களின் உரிமையையும் சேர்த்து அனுபவித்துக்கொண்டிருந்த இவர்கள் தற்போது எதிர்க்க வந்துவிட்டார்கள்.  அது தான் உண்மை.

மத்தியரசின் 18% இட ஒதுக்கீட்டில் 3% வீதத்தை ஒதுக்கியதற்காக எதிர்ப்பதாக கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மத்தியரசு 18% இட ஒதுக்கீட்டை கொடுத்து அதில் 76 உப சாதிகளை வைத்திருக்கிறார்கள்.  மத்தியரசின் சட்டப்படி புதிதாக உபசாதிகளை சேர்க்க கூடாது.  அல்லது இருக்கிற சாதியை எடுக்க கூடாது.  அது தான் சட்டம்.  அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களிற்கு தரலாம் தரக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது.   இதில் கலைஞர் அதிகம் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்திருக்கிறார்.

ஈழத்தில் ஒடுக்கப்பட்ட எமக்கு அதிகளவு உண்மையாக ஆதரவளித்து போராடுகின்றவர்கள் ஆதி தமிழர்களான அருந்ததியின மக்கள்.  அந்த மக்களின் சார்பாக ஈழத்தமிழ் மக்களிற்கும் தமிழக மக்களிற்கு நீங்கள் சொல்லும் கருத்து என்ன?

ஈழத்தில் இருப்பினும் தமிழ்நாட்டில் இருப்பினும் யார் ஒதுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.  ஈழத்தமிழர்களுக்கான அத்தனை போராட்டங்களிலும் ஆதித்தமிழர் பேரவை தம்மை கலந்து கொண்டிருக்கிறது.  எங்களின் சக்திக்கேற்ப நாம் அனைத்து பணிகளையும் செய்திருக்கிறோம்.  பாதிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு உதவவேண்டும் என்பதை கட்டாயம் செய்ய வேண்டும்.  ஈழத்தமிழர்களிற்கு மிகுந்த துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

மீண்டும் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது.  எங்கிருந்தாலும் இந்த விதை முளைக்கத்தான் போகின்றது.  அது வளர்ந்து மரமாகின்ற வரை நாம் காத்திருப்பது மட்டுமல்ல அதற்கு உரம், அதற்கான தண்ணீர் அனைத்தையும் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் எமது விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று மீனகம் ஊடாக மக்களையும் அரசியல் தலைவர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

– செவ்வி மற்றும் தட்டச்சு மீனகம் கனி

மேல்காணும் இப்பேட்டி தொடர்பாக எமது மீனகம் ஊடகத்துக்கு வந்த வீரத்தமிழ்மகன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே இணைத்துள்ளோம்:

வீரத்தமிழ்மகன் போன்ற குழப்பவாதிகளை தமிழ்மக்கள் அடையாளம் கண்டுகொள்வதுக்காக இங்கே வெளியிடுகிறோம்

From: Vera Tamil Magan <viratamilmagan@gmail.com>
Date: 2010/2/27
Subject: வாங்கடா! ஆதித்தமிழர்கள் என்ற பெயரில் தமிழினத்தினுள் நுழைந்துள்ள தெலுங்கர்களே.
To: meenakam.com@gmail.com

வாங்கடா! ஆதித்தமிழர்கள் என்ற பெயரில் தமிழினத்தினுள் நுழைந்துள்ள தெலுங்கர்களே.

தமிழினத்தை மொத்தமாய் வேரறுத்த – மழுங்கடிக்க இன்றுவரை காரணமாய் இருந்து வருபவர்களும், எம் தொப்புள் கொடி உறவுகளாம் தமிழர்கள் சென்ற மே மாதம் கொன்று எரியூட்ட தமிழக தமிழர்களின் முதுகு பக்கம் ஒளிந்து கொண்டு, எல்லா வகையிலும் தமிழனுக்கு துரோகம் செய்து வரும் தெலுங்கு நாய்களே. இங்குள்ள தமிழனை மழுங்கடித்து முடித்து விட்டு இன்று, புலம் பெயர்ந்த தமிழினதையும் திசை திருப்பி, தமிழினதையே ஒழிக்க பார்க்கும் ஆதித் தமிழர் என்ற பொய்யான பெயரில் நுழைந்துள்ள தெலுங்கு நாய்களே. இனியும் உங்கள் ஜம்பம் பலிக்காது. தமிழர்கள் நாங்கள், விளித்துக் கொண்டு விட்டோம்.

தெலுங்கர்களாய் உங்களுக்கு எதுக்கடா, தமிழர்களிடம் வந்து 7 சதவீதம் இட ஒதுக்கீடு. தெலுங்கனான கருநாநிதியை பயன்படுத்தி, தமிழர்களின் உரிமைகளை பறிக்க வந்த நாய்களே. தாழ்த்தப்பட்டவர்கள் என சிறு காரணத்தை வைத்துக்கொண்டு, உண்மையான தமிழின தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டில், தெலுங்கு கருநாநிதியின் கையாளாக செயல்பட்டு வரும் நீங்கள், தமிழினத்திற்கு என்னடா புடுங்கினீர்கள்.  பெரியார் திராவிடர் கழகத்தில் உள்ள தெலுங்கரான கோவை இராமகிருஷ்ணனும், நீங்களும் உங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை வைத்துக் கொண்டு, கொங்கு நகரில் தமிழர்களை தலையெடுக்க விடாமல், தாங்கள் தான் தமிழினத்திற்கு ஏதோ உதவி செய்வது போல் நடித்துக் கொண்டிருப்பது, இன்னும் சில நாட்களில் வெட்ட வெளிச்சமாகும்.  பெரியார் திராவிடர் கழகத்தில் உள்ள இன்னொரு தெலுங்கனான சென்னையில் இருக்கும் விடுதலை இராசேந்திரனும், தமிழினத்தை ஒழித்து ஒழிப்பதையே குறிக்கோள் கொண்டு, ஆனால் மிக சமார்த்தியமாய் தமிழர்களிடத்தில் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு செயல் படுவதும் சில நாட்களில் வெளிவரப் போகிறது.
இப்படி தெலுங்கர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழினத்தை அளித்து ஒழித்து விட முடியும் என்று நினைக்க வேண்டாம். தமிழினம் விழித்து கொண்டு விட்டது. இனியும் உங்கள் கைங்கரியத்தை தமிழினத்திடம், குறிப்பாய் ஈழத்தமிழனிடம் காட்ட வேண்டாம்…… புலம் பெயர்ந்த தமிழினமும் இப்போது, மெதுவாய் தமிழினத்தினுள் நுழைந்துள்ள நச்சு பாம்புகளான தெலுங்கர்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றனர். இனியும் அவர்களையும் ஏமாற்ற நினைக்க வேண்டாம்……நாங்கள் விடமாட்டோம்.

Vera Tamil Magan <viratamilmagan@gmail.com>

—————————————— மின்னஞ்சல் முடிந்தது——————————————————

எமது ஊடகத்தின் கருத்து:

தமிழ்மக்களை குழப்பிச்சிதறடிக்கும் இந்த வீரத்தமிழ்மகன் போன்றவர்களை மக்களிடம் அடையாளப்படுத்தும் வண்ணம் அவர் அனுப்பிய இம் மின்னஞ்சலை நாம் வெளியிட்டுள்ளோம். கோவை இராமகிருஷ்ணன் மற்றும் ராசேந்திரன் ஆகியோரை பற்றி அவதூறை உலகத்தமிழர்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள், ஈழத்தமிழ் மக்களாகிய எமக்காக  அவர்கள் செய்துள்ள பணியை எமது போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

இந்த விடயம் இந்த வீரத்தமிழ்மகன் போன்றவர்களுக்கு தெரியாதிருப்பது வேடிக்கையாகவுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழன், தெலுங்கன்  என்று பிரிவினைவாதம் பேசுவதுதான் நாகரீகம் என்று சிலர் பேசிவருகிறார்கள். இப்படி பேசிப் பேசி மக்களிடையே பிரிவினை வாதத்தை மட்டுமே வளர்க்க முடிந்ததே தவிர எமக்கோ எமது நாட்டுக்கோ இதனால் எந்தவிதமான நன்மைகளும் விளையவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழ்மக்களுக்காக கோவை இராமகிருஷ்ணனும் ராசேந்திரனும் ஆற்றிய பணியின் பொழுது வீரத்தமிழ்மகன் போன்றவர்கள் எங்கிருந்தார்கள்  என்பது தெரியாது.

ஆதித்தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய பணிகளைவிட சிறப்பாக வீரத்தமிழ்மகன் போன்றவர்கள் செய்திருக்கமாட்டார்கள், செய்திருக்கவும்  முடியாது. முடியுமானால் மக்களை குழப்பும் பிரிவினைவாத கருத்துக்களால் உறவுகளை சிதறடித்திருப்பார்கள்.
இது போன்ற செய்திகளை வீரத்தமிழ்மகன் போன்றோர் மக்களிடம் பரப்புவது ஆரோக்கியமானதல்ல. வீரத்தமிழ்மகன் போன்ற குழப்பவாதிகளை  தமிழ்மக்கள் அடையாளம் கண்டுகொள்வதற்காகவே இந்த அறிக்கையை இங்கே வெளியிடுகிறோம்.

இதுபோன்ற எம்மின உறவுகள் தங்களின்  அறியாமையை போக்கி தமிழ்பேசும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஒத்த கருத்துக்களுடன் செயலாற்றி எமது  நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்று எமது ஊடகத்தின் சார்பாகவும் உலகத்தமிழர்களின் சார்பாகவும் மீனகம் இணையம் வேண்டி  நிற்கின்றது.

— ஆசிரியர்,
மீனகம் ஊடகம்
 
Please send this letter to International Crisis Group for its unjust report

Please send this letter to International Crisis Group for its unjust report

சிறிலங்கா பெண்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள்

சிறிலங்கா  பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

Google Buzz
28 February 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு பெப்ரவரிமாதம் 19, 20 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் சந்திப்பினைமேற்கொண்டது. எமக்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த சிந்தனைககைளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 8 ம் திகதி வெளியிடப்படும்.

Google Buzz
28 February 2010

பெல்ஜியத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார முகாமையாளருமான சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் சிறீலங்கா அரசை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
28 February 2010

சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பில் அதிக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் சிறீலங்கா இராணுவ மேசர் செனரல் ஒருவர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது.

Google Buzz
28 February 2010

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை வெளியிடுவதற்கான சட்டம் இதனைவிட திருத்தங்களுடனும் விரிவாகவும் அமையவேண்டுமென தேசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Google Buzz
28 February 2010

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகள் தமது கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றன.

Google Buzz
27 February 2010

பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Google Buzz
27 February 2010

கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் யென 3000திற்கும் மேற்பட தமிழக மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன்  இன்று காலை 11.00 அளவில் கடுமையான சோதனைக்கு பின் கச்சதீவை நோக்கி படகில் புறப்பட்டனர் .

Google Buzz
27 February 2010

சிறீலங்கா அதிகாரிகளை கிழக்கு தீமோர் (தீமோர் –லெஸ்ரே) பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ள அமெரிக்கா அவர்களுக்கு நில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு என்ற விளக்கங்களை அளித்துள்ளது.

Google Buzz
27 February 2010

'முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்' என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று 'கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது' போன்ற நிலை உருவாகிறது.

Google Buzz
27 February 2010

இந்தோனசியாவில் ஏதிலிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகள் சிலர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
27 February 2010

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொதுத் தேர்தலில் யாழ் வேட்பாளராக போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் யாழ் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Google Buzz
27 February 2010

அரசியல், தேசியம் என்று இன்னும் காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை என மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.தங்கேஸ்வரி கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Google Buzz
26 February 2010

துணை இராணுவக் குழு ஆயுததாரியான பிள்ளையானின் பாதுகாப்பு திடீரென அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

Google Buzz
26 February 2010

யாழ்ப்பாணத்தின் கடல் நீரேரியில் கடல்தொழில் செய்வதற்கு சிறிலங்காப் படையினரால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
26 February 2010

புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழக் கோரிக்கை, பயங்கரவாத தடைச்சட்டத்தினை தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமையும் என இன்டர்நெசனல் க்ரைசீஸ் என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Google Buzz
26 February 2010

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மகிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதாக றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google Buzz
26 February 2010

யாழ் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் விபரங்கள்.

Google Buzz
26 February 2010

கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் 6 பேர் மீது தொடர்ந்தும் விசாரணைகள் நடாத்த சிறிலங்கா நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Google Buzz
26 February 2010

[படங்கள்] சென்னை அடுத்த பொன்னேரியில் 25.02,2010 அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரால் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Google Buzz
26 February 2010

மேலதிக செய்திகள்

சனி, 27 பிப்ரவரி, 2010

தை மாதத்திலிருந்து காணாமற்போனோர் தொகை 23 – மனித உரிமை ஆணைக்குழு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகள் தமது கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றன.

Google Buzz
27 February 2010

கடந்த தை மாதம் முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 23 பேர் காணாமல் போயுள்ளதாக சிறிலங்காவின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Google Buzz
27 February 2010

பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Google Buzz
27 February 2010

[2ஆம் இணைப்பு ஆடியோ] தமிழினத்திலே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் ஆதித்தமிழர்களான அருந்ததிய மக்களின் முன்னேற்றத்தினை தடுக்க தலித் தலைவர்களே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும் அருந்ததிய மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.

Google Buzz
27 February 2010

கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் யென 3000திற்கும் மேற்பட தமிழக மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன்  இன்று காலை 11.00 அளவில் கடுமையான சோதனைக்கு பின் கச்சதீவை நோக்கி படகில் புறப்பட்டனர் .

Google Buzz
27 February 2010

சிறீலங்கா அதிகாரிகளை கிழக்கு தீமோர் (தீமோர் –லெஸ்ரே) பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ள அமெரிக்கா அவர்களுக்கு நில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு என்ற விளக்கங்களை அளித்துள்ளது.

Google Buzz
27 February 2010

'முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்' என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று 'கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது' போன்ற நிலை உருவாகிறது.

Google Buzz
27 February 2010

இந்தோனசியாவில் ஏதிலிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகள் சிலர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
27 February 2010

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொதுத் தேர்தலில் யாழ் வேட்பாளராக போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் யாழ் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Google Buzz
27 February 2010

அரசியல், தேசியம் என்று இன்னும் காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை என மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.தங்கேஸ்வரி கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Google Buzz
26 February 2010

துணை இராணுவக் குழு ஆயுததாரியான பிள்ளையானின் பாதுகாப்பு திடீரென அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

Google Buzz
26 February 2010

யாழ்ப்பாணத்தின் கடல் நீரேரியில் கடல்தொழில் செய்வதற்கு சிறிலங்காப் படையினரால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
26 February 2010

புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழக் கோரிக்கை, பயங்கரவாத தடைச்சட்டத்தினை தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமையும் என இன்டர்நெசனல் க்ரைசீஸ் என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Google Buzz
26 February 2010

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மகிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதாக றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google Buzz
26 February 2010

யாழ் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் விபரங்கள்.

Google Buzz
26 February 2010

கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் 6 பேர் மீது தொடர்ந்தும் விசாரணைகள் நடாத்த சிறிலங்கா நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Google Buzz
26 February 2010

[படங்கள்] சென்னை அடுத்த பொன்னேரியில் 25.02,2010 அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரால் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Google Buzz
26 February 2010

லெப்ரஸ் பெரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் எனச் சத்தேகிக்கத்தின் பேரில் 25 பேர் மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நாம் அறிந்ததே. இவர்களின் இரத்த மாதிரிகளை பிரிசோதித்ததில் அவர்கள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லையென தெரியவருகின்றது.

Google Buzz
26 February 2010

நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த  தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ம் திகதி ஆரம்பமாகின. தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.

Google Buzz
26 February 2010

20புதிய தேர்தல் சின்னங்களை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் 44 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதானால் புதிதாக தேர்தல் சின்னங்களை அறிவிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவிக்கின்றது.

Google Buzz
26 February 2010

மேலதிக செய்திகள்