தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது. வல்வெட்டித்துறையில் பிறந்து, தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த அப்பெருமகனார், அரசு அலுவலராகப் பணி ஆற்றிய நாள்களில், நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது. தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
மலேசியாவில் நான்கு பிள்ளைகளுடன் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாமல் வறுமையின் பிடியில் வாழும் தமிழ் குடும்பம் வறுமையில் வாடி வருகின்றனர். கணவர் பாதுகாவலராக பணிபுரிந்து மாதம் 800 வெள்ளி வருவாய் பெறுவதாகவும், தனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தன்னால் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தனலட்சுமி த/பெ பாஸ்கரன் (வயது 35) தெரிவித்தார்.
சிறீலங்காவின் போர்க்கால குற்றங்கள் மற்றும் போர் முடிந்த பின்னருள்ள நிலமைகள் குறித்த நீதி விசாரணை ஒன்று இம்மாதம் அயர்லாந்திலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் (Permanent Peoples Tribunal) நடக்கவுள்ளது. ஜனவரி மாதம் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில், போர்க்காலக் மனித உரிமை மீறல்கள், போர் சட்ட மீறல் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.
மேலதிக செய்திகள்
- எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு
- உயர்பாதுகாப்பு வலயம் சம்பந்தமாக கலந்துரையாடல்
- தேர்தல் விளம்பரங்களை அகற்றுங்கள் – தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
- கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் – அறிவிப்பு இன்று
- இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றாரென்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலே – ஈழப்பிரியன்
- சிவாஜிலிங்கம் என்ன யார் வந்தாலும் இத்தேர்தலில் வெற்றியீட்ட முடியாது: மனோகணேசன்
- உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கம் ஐரோப்பிய ஒன்றியம் அவசரவேண்டுகோள்!
- எங்கள் மடியில் அமர்ந்து எங்கள் அன்னைக்கே துரோகம் செய்யும் உங்களை நாங்கள் மன்னிப்போமா!!
- கோத்தபாயாவே ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு பொறுப்பு: சரத் பொன்சேகா
- சிலாபம் நகரைவிட்டு தமிழர்களை வெளியேறும்படி காவல்துறை திடீர் உத்தரவு: பதற்றம், குழப்பம்
- சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல்: வேட்பாளர்கள், வாக்காளர்கள் விபரம்
- அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக