[படங்கள்] ஏதிலி உரிமை கோரி அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கையில் இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்து ஏதிலிகள் பெரும் துன்பதுயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். விரிவு… »
பிரதான செய்திகள்
ஏனைய செய்திகள்
தேர்தல் தொடர்பான வன்முறைகள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துச் செல்வது தொடர்பாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறவேண்டுமானால், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக கொள்கை ரீதியிலான விடயங்களை முதன்மைப்படுத்தி பல்வேறு விடயங்களை வெளியிடக்கூடிய சுதந்திரம் அவசியம் என அறிக்கை ஒன்றில் இலங்கை ஆயர்கள் பேரவை கேட்டுள்ளது.
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது. முழு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்திருப்பவர், எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை.
இலங்கை அரச அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் வாக்குறுதிகளில் அமெரிக்கா அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்காது என்றும் அந்த நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அந்த செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
சிறிலங்காவில் நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தல் காரணமாக அந்த நாட்டுடனான உறவுகளில் சிறந்த மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அமெரிக்காவில் காணப்படுகின்றது. தேர்தல் இரு நாடுகளின் உறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா எனக் கேட்டதற்கு, அந்த நாட்டின் மூத்த அதிகாரியொருவர் உறவுகள் செயற்படும் விதத்தை அது ஏற்கனவே சாதகமாக மாற்றிவிட்டது என்றார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அதிகளவு ஊடக சுதந்திரம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளமை குறித்து அமெரிக்க அதிகாரி அதிகளவு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெளியிட்டார்.
எதிர்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுவதற்கு நான் தயக்கம் கொண்டுள்ளேன். வேட்பாளர்கள் பலவிதமான வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை நிறைவேற்றாமல் விடுவதுமே இதற்குக் காரணம். என்றாலும் ஜெனரல் பொன்சேகா சில நல்ல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
எனினும், அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு நிதியுதவி வழங்குவதாக சிறிலங்காவின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை வாஷிங்டன் நிராகரித்துள்ளது.
மேலும் சிறிலங்கா நீண்டகால நலனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்த விரும்பவேண்டும் என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி சிறிலங்காவின் தேயிலை, ஆடைகள் போன்றவற்றுக்கான முக்கிய சந்தையாக மேற்குலகமே விளங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்காவின் அரச அதிபராக வரவேண்டும் என அமெரிக்கா கருதும் முதல் நபராக பொன்சேகா விளங்கமாட்டார். எனினும், அவர் வென்றால் அது அமெரிக்காவுடனான நல்லுறவுக்கான பாதையைத் திறக்கும் என அமெரிக்க மக்கள் கழகமொன்றைச் சேர்ந்த சிறிலங்கா விவகார நிபுணர் ரொபேர்ட் ஓ பேர்ஸ்ட் குறிப்பிட்டார்.
இராணுவத்துக்கும் பொன்சேகாவுக்கும் உள்ள தொடர்பே அவரது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றது. யுத்தக் குற்றங்கள் உண்மையில் இடம்பெற்றிருந்தால் அது அவருக்குத் தெரிந்திருக்கும். அவருக்கு அதில் தொடர்பிருக்கும் என்றும் ஒபேர்ஸ்ட் தெரிவித்தார்.
பொருளாதாரத் தேவை ஏற்பட்டாலொழிய வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் சிறிலங்கா, மேற்குலகின் எதிரி நாடுகளின் பக்கம் திரும்பாது என ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அசோக பண்டாரகே தெரிவித்தார்.
தீவிர சிங்களத் தேசியவாதிகள் கூட சிறிலங்கா மேற்குலகிலிருந்து துண்டிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்றார் அவர். இதேவேளை, இலங்கைப் பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துவரும் "பேர்ள்' அமைப்பைச் சேர்ந்த மனோரஞ்சன், சரத் பொன்சேகாவுக்கும் ராசபக்சவுக்கும் இடையில் தெரிவு செய்வதற்கு எதுவுமில்லை என்றார். தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் குறித்து எவ்வித கரிசனையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மகிந்த ராசபக்சவை வெறுக்கும் புலம் பெயர் தமிழர்களில் சிலர் பொன்சேகாவுக்குச் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கத் தயாராகவுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் மகிந்த தோற்கடிக்கப்படுவதை விரும்புகின்றனர். இது மாற்றங்களைக் கொண்டு வரும் என்றார் கனடா தமிழ் காங்கிரஸின் டேவிட் பூபாலபிள்ளை.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் சிறிலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இரத்துச் செய்வதற்கான விசாரணையைக் கடந்த ஜனவரி 14 இல் நடாத்தியது. இறுதியில், சிறிலங்கா அரசாங்கம் மனிதவுரிமை மீறல்களை நிறுத்தி, நிலமையைச் சீரமைக்காத பட்சத்தில் ஆறு மாதத்துக்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் சிறிலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இரத்துச் செய்வதற்கான விசாரணையைக் கடந்த ஜனவரி 14 இல் நடாத்தியது.சிறிலங்கா மீதான, மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இவ்விசாரணையின் போது ஆராயப்பட்டது.
சிறிலங்காவிற்கான தூதுவர் 'முன்னாள் போராளிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுப் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,குழந்தைப் போராளிகள் புனர்வாழ்வு மையங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப் படுகின்றனர்' எனக் கூறியதுடன் சிறிலங்கா மனிதவுரிமை விடயங்களிற் கூடிய கவனஞ் செலுத்துவதாகவும் மனிதவுரிமை மீறல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழ் ஒருங்கமைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன், சிறிலங்காவின் தூதுவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ள முடியாததும் உண்மைக்குப் புறம்பானதுமென மறுத்துத் தன் விவாதத்தை விசாரணைக்குழுவின் முன் வைத்தார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை 'நவீன கொலோகாஸ்ற்' என வர்ணித்த தமிழ் ஒருங்கமைப்பு சிறிலங்கா அரசு மக்களை முகாம்களில் அடைத்தும் சித்திரவதை செய்தும் வருகிறது என்று தெரிவித்தது. முன்னர் விடுவிக்கப்பட்டவர்கள் கூட தற்காலிக முகாம்களில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளார்கள். சிறிலங்காவின் வடக்குப் பிரதேசம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாறிக் கொண்டிருக்கிறதெனவும் குற்றஞ் சாட்டப்பட்டது.
சிறிலங்கா அரச தூதுவர், முன் வைத்த எல்லாவிதமான விவாதங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. கடந்த 2008லிருந்து ஒரேயொரு குழந்தை மட்டுமே போராளியாக்கப் பட்டுள்ளார் எனத் தூதுவர் தெரிவித்தார்.அதற்கு மறுப்புத் தெரிவித்த தமிழ் ஒருங்கமைப்பு, தொடர்ந்தும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் எட்டு வயதுடைய குழந்தையுட்பட பல சிறார்கள் சிறிலங்கா அரசினால் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதையை அனுவிப்பதாகவும் எம்மிடம் அதற்கான ஆதாரமுண்டு எனவும் வாதிட்டது.
கடந்த 2008 டிசம்பரிலிருந்து ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே கடத்திச் செல்லப்பட்டதாக, எல்லை தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பின் இணையப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தூதுவர் குறிப்பிட்டார். எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த வின்சன்ட் புறசல் இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து,நேற்று முன்தினம் கூட பி.பி.ஸி யின் உள்நாட்டு நிருபர் அரசைச் சார்ந்த அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டாரெனவும் அவர் அரசின் தேர்தற் பிரச்சாரக் கூட்டமொன்றிற் செய்தி சேகரிக்கச் சென்ற போதே தாக்கப்பட்டாரெனவும் விசாரணைக் கமிசனிற் தெரிவித்தார்.
சிறிலங்கா தூதுவர், 2004 இல் சுனாமியாற் பாதிக்கப்பட்டோர் சார்பாக வேண்டுகோளொன்றை வைத்துப் பரிதாபந் தேடும் முயற்சி செய்தார். தமிழ் ஒருங்கமைப்பாளர் 'ராசபக்ச அரசு உதவிப்பணம்,வரிச்சலுகைகளை மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குச் செலவிடுகின்றதேயொழிய பெரும்பாலும் இப்பணம் பாதிக்கப் பட்ட மக்களைப் போய்ச் சேரவில்லை" யென சிறிலங்கா அரசின் நடைமுறையைச் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோய்ஹிக்கின்ஸ் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இரத்துச் செய்ய வேண்டுமென வாதிட்டதுடன், சிறிலங்கா அரசு 'புதிய புதிய செய்திக்' கதைகளைத் தயாரித்துப் பரப்பி விடுகிறதெனக் குற்றஞ்சாட்டினார். அங்கிருக்கும் யதார்த்த நிலையை சிறிலங்கா அரசு திரிக்கிறது.மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் இந்தச் செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனவும் கமிசனுக்கு வலியுறுத்தினார்.
மேலும் அவர் தனது விவாதத்தில் 'சாதாரண தொழிலாளருக்கோ வறிய சிறிலங்கா மக்களுக்கோ பாதகமான ஒரு சூழலை உருவாக்கும் நோக்கம் யாருக்கும் இல்லை. இந்த வரிச்சலுகை இரத்துக்கான முழுப் பொறுப்பும் சிறிலங்கா அரசையே சாரும்' எனவும் குறிப்பிட்டார்.
இறுதியில், சிறிலங்கா அரசாங்கம் மனிதவுரிமை மீறல்களை நிறுத்தி, நிலமையைச் சீரமைக்காத பட்சத்தில் ஆறு மாதத்துக்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து மூன்று உயிர்கள் பலிகொள்ளப்பட்டமை ஜனநாயகத்திற்கு தடையாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தாலும் இலங்கையுடன் உறுதியாக தொடர்புகளை வைத்திருக்க எண்ணுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக