சகல மக்களையும் ஜனநாயக வழிக்கு அழைத்துச் செல்லும் சுமையை ஜெனரல் சரத் பொன்சேக சுமந்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அரங்கேறும் விட யங்கள் நடுநிலைப் பார்வையாளர்கள், நோக்கர்கள் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்தத் தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும், தேர் தல் விதிமுறைக்கு அமைவாகவும் நடத்துவதில் தேர்தல் கள் ஆணையாளர் நாயகத்துக்கு உள்ள தகுதி, திறமை ஆகியன இப்போதே கேள்விக்குள்ளாகியிருக்கின்றமை குறித்துப் பல தரப்புகளில் இருந்தும் ஏற்கனவே முணு முணுப்புகள், அதிருப்திகள், ஆட்சேபங்கள் பரவலாக வெளிப்படத் தொடங்கிவிட்டன.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களது வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள் என்பன தற்போது காணாமல் போகத் தொடங்கியிருப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறும் வரையில் அவர்களது வீட்டு உடைமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு உரிமை இழப்பு
- சிறிலங்கா அரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டு செய்மதி படச்சான்றுகளுடன் சமர்ப்பிக்கபடவுள்ளது
- மகிந்தவின் தேர்தல் பிரசாரத்தில் சிறிலங்காவின் தூதுவர்கள்
- சரணடந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொண்றது தொடர்பாக மக்கள் அக்கறை செலுத்தவில்லை – லக்ஸ்மன் யாப்பா
- சிறிலங்காவில் சிறுவர் திருமணம் அதிகரிப்பு
- யாழ்.குடாநாட்டு மக்கள் மீது பொன்சேகாவின் கரிசனை
- தேசியத்தலைவருடன் வைகோ
- தீர்வாக இடைக்கால பரவலாக்கல் – ரணில் விக்கிரமசிங்க
- மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவருக்கு அஞ்சலி செலுத்த தொல்.திருமாவளவன் வருகை
- பொன்சேகா கிழக்கை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க இரகசிய ஒப்பந்தம் செய்தாரா!
- தேர்தலில் வாக்களிக்கும் மனநிலையில் தமிழர்களில்லை ஆனாலும் கட்டாயத்தில் இருக்கிறார்கள் – விக்கிரமபாகு கருணாரத்ன
- காணாமற் போனோர் பட்டியலிலுள்ளவர்களின் உறவினர்களை மனோகணேசன் இன்று சந்திக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக