பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர். விரிவு… »
பிரதான செய்திகள்
கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன.
ஏனைய செய்திகள்
தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழில் தற்போதுள்ள நூல்களில் தலைமுதல் நூலான தொல்காப்பியத்தின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பட்டதாக ஆய்வுகள் கணக்கிடுகின்றன. மூவாயிரம் வருடங்களுக்கு இத்தாலியில் வெடித்துச் சிதறிய தீக்குழம்பினல் கருகிப்போய், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள பொம்பே நகரின் நாகரிக அமைப்பைக்கண்டு இன்றைய உலகமே வியந்து நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக