எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது. தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
மலேசியாவில் நான்கு பிள்ளைகளுடன் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாமல் வறுமையின் பிடியில் வாழும் தமிழ் குடும்பம் வறுமையில் வாடி வருகின்றனர். கணவர் பாதுகாவலராக பணிபுரிந்து மாதம் 800 வெள்ளி வருவாய் பெறுவதாகவும், தனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தன்னால் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தனலட்சுமி த/பெ பாஸ்கரன் (வயது 35) தெரிவித்தார்.
சிறீலங்காவின் போர்க்கால குற்றங்கள் மற்றும் போர் முடிந்த பின்னருள்ள நிலமைகள் குறித்த நீதி விசாரணை ஒன்று இம்மாதம் அயர்லாந்திலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் (Permanent Peoples Tribunal) நடக்கவுள்ளது. ஜனவரி மாதம் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில், போர்க்காலக் மனித உரிமை மீறல்கள், போர் சட்ட மீறல் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.
இலங்கையில் அனைத்துப்பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள் தமிழ் அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகின்றது. வெறுமனே சந்தேகத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலர் மீது குற்றப்பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை எனினும் அவர்கள் ஒன்றரை தசாப்தங்களை சிறைகளில் கழித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- சிலாபம் நகரைவிட்டு தமிழர்களை வெளியேறும்படி காவல்துறை திடீர் உத்தரவு: பதற்றம், குழப்பம்
- செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு – தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு
- சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல்: வேட்பாளர்கள், வாக்காளர்கள் விபரம்
- ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது: மலேசிய துணை முதல்வர்
- அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்பு
- மகிந்த ராஜபக்சே பாரிய மன அழுத்தத்தால் மருத்துவ ஆலோசனை
- புறக்கணி சிறீலங்கா: அமெரிக்க மக்களின் கவனத்தை கவர காணொலி விளம்பரம்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம்
- மட்டக்களப்பு செல்லவுள்ள பொன்சேகாவுக்கு பாதுகாப்பை நீக்கியுள்ள சிறீலங்கா அரசு
- கொழும்பு சிறையில் சிங்களக்கைதிகள் தாக்குதலில் இரு தமிழ் கைதிகள் படுகாயம்
- தேசியத் தலைவரின் படங்கள் அடங்கிய பதாகைகள் தமிழ்நாடு அரசால் அகற்றம்
- சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் உயர்கண்காணிப்பில் வவுனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக