வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.
மரண அச்சுறுத்தல்கள் தமக்கு புதிதல்ல எனத் தெரிவித்திருக்கும் அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னர் பயங்கரவாதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல் வந்ததாகவும் தற்போது ஆளும் அரச தரப்பினரிடமிருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
"இந்த நாட்டில் நிலவும் கையூட்டு மற்றும் ஊழல்களை ஒழித்தால் நான் அளித்துள்ள பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை விடவும் மேலதிகமான நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவை உயர்த்துதல், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கான வரியினை இல்லாதொழித்தல், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நான் வழங்கியுள்ளேன்.
இந்த வாக்குறுதிகளை விமர்சிக்கும் எதிரணியினர் இவற்றை எப்படி பொன்சேகா நிறைவெற்றப்போகிறார்? எனக் கேட்கின்றனர்.
இந்த நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் கையூட்டையும் ஊழலையும் ஒழித்தால் இவற்றை நிறைவேற்றுவது மிகவும் இலகுவான விடயமாக மாறிவிடும். அதைவிடவும் அதிகமான வேலைகளை நாட்டு மக்களுக்காக செய்ய முடியும்.
என்னுடன் இணைந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுமற்றவர்கள். அதனால் என்னுடன் இணைந்து ஊழலை ஒழிக்க புறப்பட்டுள்ளார்கள்.
எமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. மரண அச்சுறுத்தல்கள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல. ஏற்கனவே பயங்கரவாதிகள் எமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இன்று அரச தரப்பினர் மரண அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்" என்றார்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான கப்டன் மினிமல் முனசிங்க, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இக்கூட்டத்தில் அறிவித்தார்.

நாட்டின் 75 வீதமான வளங்களை மகிந்த ராசபக்சவே நிர்வாகம் செய்து வருவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்கத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு, அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்கவில்லை என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் விடுதி ஒன்றில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27/12/2009 ) அன்று சந்தேகத்தின் பேரில் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் குடும்ப தலைவன் ஒருவர் கைது செயயப்பட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
- யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் மற்றும் ஒரு ஏமாற்று நாடகம்
- மட்டு.வில் 6 தமிழ் விவசாயிகள் காவல்துறையினரால் கைது
- தம்பல அமில தேரரின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் – ஜே.வி.பி
- கிழக்கில் சிங்கள மக்களின் வருகை அதிகரிப்பு
- தம்பல அமில தேரர் கைது
- யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அவர்களை தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று சந்தித்தனர்
- ஆசிய வங்கியிடமிருந்து அவசர கடனாக 150 மில்லியன் டொலர்கள் சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ளது
- சிறிலங்கா முழுவதிலும் 6000 போலி வைத்தியர்கள்
- இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து
- தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளார்
- இந்தோனேசியாவில் ஏதிலி அந்தஸ்துகோரி நின்ற ஏதிலிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
- எதிர்பாராத அரசியல் திருப்பம் ஏற்படவுள்ளது – கயன்த கருணாதிலக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக