இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ கத்துக்கும் இடையில் மிக நீண்ட இடை வெளியின் பின்னர் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியவருகின்றது.
எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தாம் அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாகவும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அவருக்கே ஆதரவு வழங்குவது குறித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏதிலிகளில் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவ மனையில் வைத்து ஐ.ஓ.எம் மற்றம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் வைத்து மரணமடைந்த இலங்கை ஏதிலியின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது.இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியுகே பைசாஸ்யா இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள, அரச அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசத்தில் உள்ள 15 லட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்த முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்த எம்.பி சிவாஜிலிங்கம் திருச்சி விமானநிலையத்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815 பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப் படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
தானும் தன்னுடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது.
கருணாவின் நெருங்கிய நண்பியும் மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியின் பரதநாட்டியத் துறை பகுதி நேர விரிவுரையாளருமாகிய செல்வி சகிலா சைமன்சிங்கோ அண்மையில் கனடாவிற்கு சென்றார். தற்போது அவர் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக தான்தேன்றித்தனமாக அரச உடமைகளை கையாளுதல் மற்றும் அரச பணத்தை செலவு செய்தல் சம்பந்தமாக சுமார் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ட்ரான்பெரன்சி இன்ரநெஷனல் அமைப்பு தெரிவிக்கின்றது.
மேலதிக செய்திகள்
- கருணாவால் அனுப்பி வைக்கப்பட்ட மட்டக்களப்பைச்சேர்ந்த நடன ஆசிரியை கனடாவில் அரசியல் தஞ்சம் கோருகிறார்
- சிறிலங்கா அதிபர் தேர்தலில் அரச உடைமைகள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
- சரத் பொன்சேகாவின் கருத்தை ஐநா விசாரிக்க வேண்டும் – பன்னாட்டுச் சட்ட நிபுணர் பிரான்சிஸ் போய்ல்
- மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர் நோக்குகின்றனர் – ரொய்டர்ஸ்
- இடம்பெயர்ந்த மக்களை வைத்து தேர்தலிற்காக கடன்களை பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டம்
- சனாதிபதி தேர்தலிற்கு முன்னாள் போராளிகளும் வாக்களிக்க ஏற்பாடு
- மாத்தறையில் புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிக்கு சீனா நிதி உதவி
- சிறைப்பிடித்து வைத்துள்ள முன்னாள் போராளிகளை இரகசிய கொலை செய்ய சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் திட்டம்
- தேர்தல் கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபடாது – இலங்கைக்கான பிரதிநிதி
- மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த இரு வாரங்களில் வெளியாகும்
- இடம்பெயர்ந்தோர் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு
- சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதை முகாமில் துப்பாக்கிப் பிரயோகம் – சிறுவர்கள் பெண்கள் உட்பட 5 பேர் காயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக