தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை வரலாற்றுப் புகழ்பெற்ற வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம் என்று கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்கள் எனக் கூறப்படும் முள்வேலி முகாம்களில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், கைதிகள் பலரை பல மணிநேரம் வெயிலில் முட்டிபோட வைத்ததாகவும் நேரில் பார்த்த மருத்துவ தொண்டர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக ஜனவரி மாதம் நடைபெறப்போகும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. சிறிலங்காவின் ஆறாவது அதிபர் தேர்தலுக்கான இந்த வேட்புமனுத்தாக்கலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 18பேரும், சுயேச்சையாக 5பேருமாக மொத்தம் 23பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தபோதிலும் ஒருவரது வேட்பு மனுவை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ள நிலையில் 22பேர் போட்டியிடுகின்றார்கள்.
விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஏனைய செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்பு வாய்ந்த கட்சி என்பதால் சிறீலங்கா அரசத்தலைவர்த் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை அக்கட்சி அவசரப்பட்டு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 தமிழ் ஏதிலிகளில் இதுவரை 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கும் மற்றும் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோப்பன்ஹேகன் பருவநிலை மாநாட்டில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது இலஙகை இராணுவத்தினால் ஏற்பட்ட மனித பேரழிவும் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றிய 13 நாட்கள் புகைப்படக் கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (IFJ) விடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார்.
சிறிலங்காவில் டெங்கு நோயின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 299ஆக உயர்வடைந்துள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி இன்று முதற்கொண்டு யாழ்-கண்டி(ஏ-9) வீதியை பொதுமக்கள் பயணிப்பதற்கும் வாகனங்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கட்சித் தாவல்களும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.பி.திசாநாயக்க அங்கிருந்து வெளியேறி மீண்டும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
தேசப்பற்றாளர் என்று சிங்கள தேசத்தால் முன்னர் புகழாரம் சூட்டப்பட்ட சரத் பொன்சேகா இன்று தேசத்துரோகி போல் விமர்சிக்கப்படுகிறார். ஆங்கிலப் பத்திரிகையொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், இறுதி யுத்தத்தில் பா. நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட் டமைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவே காரணமென்று சரத் கூறியதாக வெளிவந்த செய்தியே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகியது.
"அடிமைகளாக இருப்பது அவமானமி ல்லை, ஆனால் உரிமையாளர்களே அடி மைகளாக இருப்பது தான் அவமானம்' 1929 ஆம் ஆண்டு அமெரிக்க கறுப்பினத்தவர் களுக்கு மகாத்மா காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பினத் தவர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்தியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக