வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…
'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார்.
ஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை 'வீர வணக்கம்'. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழப் போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.
'நாம்' மற்றும் 'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
மேலதிக செய்திகள்
- பிரபாகரனை பார்த்து மற்றவர்கள் பாடம் கற்க வேண்டும் – சிறீலங்கா அரச அமைச்சர்
- சிங்கள இனவாதிகளின் முட்கம்பி சிறையில் கடந்த மாதத்தில் மட்டும் 41 குழந்தைகள் இறந்துள்ளன
- "கிளிநொச்சியில் பிறந்தது குற்றமா?" – பேராதனை பல்கலைக்கழக மாணவியின் கைதுக்கு ஜே.வி.பி. கடும் கண்டனம்
- மீளக்குடியேற்றப்பட்ட மக்களில் குடும்பத் தலைவர்கள் பலரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்கின்றனர்: த.தே.கூட்டமைப்பு
- சோதிடர்களின் உயிருக்குக் கூட இலங்கையில் உத்தரவாதம் இல்லை: அமெரிக்கப் பத்திரிகை
- அனுராதபுர சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல்
- பிரான்சில் புதன் கிழமை தோறும் நீதிக்கான ஒன்று கூடல்
- பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை
- பிரான்சில் 1977ன் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீள் அங்கீகார தேர்தல் 2010 ஒன்றுகூடல்
- வவுனியாவில் பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் கைது
- ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 23 இல் ? அறிவிப்பு எந்த வேளையிலும் வரலாம்!
- குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு ஐ.நா. உதவ வேண்டுமென்று ஜோன் ஹோம்ஸுடம் கோரிக்கை
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக