தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே எழுந்துள்ள எழுச்சியையும் சிங்கள அரசுக்கு எதிரான மீனவர் போராட்டத்தையும் மழுங்கடிக்கவும் அதை திசை திருப்பவும் நிகழ்வுகள் நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. விரிவு… »
பிரதான செய்திகள்
ஏனைய செய்திகள்
வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலிகளின் விடுதலைக்கு உடன் வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட சிறீலங்காவில் எங்குமே தமிழர்கள் சுதந்திரமாக அச்சமின்றி நடமாடக்கூடிய நிலைமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக