ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது.
கச்சதீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என சிறீலங்காக் கடற்படையினர் மிரட்டினர் என்று தமிழக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
மௌனத்தின் வலி நூறு புகழ்பெற்றவர்கள் ஆக்கிய புத்தகம். வெளியீட்டு நிகழ்வு நவம்பர் 16, சனி, மாலை 4.30. பேரழிவும் அவநம்பிக்கைகளுமாய் சிதைந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களின் இன்றைய துயர்களை பரந்துபட்ட பொதுமக்கள் வெளிக்கு (Civil Society) அன்பு நேயத்தோடு எடுத்துச்சொல்லும் மிக முக்கியமான, தனித்துவமான முயற்சியாய் "ஈழம் : மௌனத்தின் வலி"
[படங்கள்] சிங்கள இனவெறி அரசுக்கு உதவிய இந்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில், இந்திய இலங்கை தேசியக் கொடிகளை எரித்தத் தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனையொட்டி, கோவை நடுவண் சிறையிலிருந்து பா.தமிழரசன், வே.பாரதி ஆகியோர் கடந்த செவ்வாய் (10.11.09) அன்று மாலை 7.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலதிக செய்திகள்
- புலிகளின் முயற்சிகளை முறியடிக்க தென்னாபிரிக்கா உதவும்: என்கோனா மஷாபேன் உறுதி
- சிறீலங்காவில் எந்தவித முதலீடுகளையும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளக் கூடாது – ஈழத்தமிழர்கள் சங்கம்
- சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
- கடலில் தத்தளிக்கும் எம் மக்களை காப்பற்ற இங்கே உடனடியாக வாக்களியுங்கள்
- அவுஸ்ரேலியா 78 ஏதிலிகளையும் மீள் குடியேற்றம் செய்ய இணக்கம்
- மகிந்த ராஜபக்சே இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: சோமவன்ச அமரசிங்க
- யுத்தம் முடிவடைந்த பின்னரும் மக்கள் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்: வாசிங்டன் டைம்ஸ்
- ஈழத்தமிழ் ஏதிலிப் பெண்களின் உண்ணாநிலைப் போராட்டம் நிறுத்தம்
- சரத் பொன்சேகாவின் கட்அவுட்களை அகற்றுமாறு உத்தரவு
- கொக்கிளாயிலும் கல்குடாவிலும் தம்மை மீண்டும் குடியமர்த்துமாறு சிங்கள குடியேற்றவாசிகள் கோரிக்கை
- படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையை தொடரும் சிறீலங்கா படைத்தரப்பு
- ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு – தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடு
முதன்மைச்செய்தி November 12th, 2009
கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் ஏதிலிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. விரிவு… »
பிரதான செய்திகள்
அவன் ஒரு சிங்கள பத்திரிக்கையாளன் நாட்டின் ஜனாதிபதியுடன் விருந்துண்ணும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவன், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பனும் கூட. ஆனால் தனதுநாட்டில் அரசின் ஆசிர்வாதத்துடன் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கும் சிங்களபேரினவாதத்தை கண்டு உள்ளம் கொதிக்கிறான். ஒரு பத்திரிக்கையாளனாக உண்மை செய்திகளை தனது ஊடகத்தின் மூலம் உலகிற்கு தெரிவிக்கிறான்.
இந்திய அரசை மட்டுமல்ல; உலகையே தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். மேற்குவங்க மாநிலம் லால்கர் பகுதியில் வெடித்துக் கிளம்பிய மாவோயிஸ்டுகள், இப்போது ஜார்கண்ட், ஒரிஸா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பழங்குடி மக்களுக்காக ஆயுதங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடி மக்கள் மீதான மேற்குவங்க மாநில அரசின் வன்முறைகளை `ஆபரேஷன் கிரீன் ஹண்ட்' (Operation Green Hunt) என்று ஆவணப் படமாக்கும் முயற்சியில் மேற்குவங்க எல்லைப் பகுதியில் கேமராவோடு திரிந்து கொண்டிருக்கிறார், இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான கோபால் மேனன்.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக