ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இன்று இலங்கை அரசினால் மிகவும் கொடிய காட்டுமிராண்டித் தனமானதாகவும், கட்டுக்கடங்காத நிலையையும் நோக்கி வளர்ந்து செல்வதை சர்வதேசம் கண்டுகொள்ளுமா? இல்லை கண்களை இறுக மூடிக்கொள்ளுமா என்ற பெரும் கேள்விக்குறியுடன் சர்வதேசத்தை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் காத்திருக்கின்றது.
இலங்கையின் தமிழ் நாளிதழ்களிலும் இலங்கைத் தமிழர் சார்பான இணையத்தளங்களிலும், தமிழக நாளிதழ்கள் மற் றும் சஞ்சிகைகளிலும் பரபரப்பாக அண்மைக்காலத்தில் பேசப் பட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. தமிழகத்தில் அடுத்த வருடத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நடத்த உத் தேசித்திருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, கலந்துகொள்ள மாட்டாரா என்ற விடயத்தை ஒட்டி எதிரும், புதிருமான பல கருத்துகளும், விமர்சனங்க ளும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, புதுக்கோட்டையிலிருந்து நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை சிறீலங்கா கடற்படையினர், பிடித்துச் சென்றுள்ளனர். இவ் அடாவடித்தனத்தைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சிறீலங்கா சென்று மகிந்தவுடன் கைகுலுக்கிவிட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சிறீலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தகால நிகழ்வுகள் பற்றி தற்போது வாஷிங்ரனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- கிளி – முல்லை மாவட்ட அரச பணியாளர்கள் கடமைக்குத் திருப்புங்கள்! இல்லையேல் சம்பளங்கள் நிறுத்தப்படும் – சந்திரசிறீ
- ஆஸி கடலில் படகு விபத்தில் காணாமல் போயுள்ள இலங்கைத் தமிழர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது: இதுவரை மூவரின் சடலம் மீட்பு
- இந்துக் கோவில்களை இடித்தவர் ராஜபக்சே: வைகோ
- நாம் உணர்ந்துகொள்ளத் தவறும் படகுத் தமிழர்களின் துயரம்: பாரிஸ் ஈழநாடு
- கல்லடி இராணுவ முகாம் பகுதியில் குண்டுவெடிப்பு: சிப்பாய் ஒருவர் பலி
- ஆஸி. சென்ற மற்றுமொரு படகைக் காணவில்லை எனத் தகவல்
- பொன்சேகாவை காப்பாற்ற சந்திரிகா கிலாரியுடன் பேச்சு
- கொலைசெய்யப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணை இடம்பெறுவது சந்தேகம்
- வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவினால் கப்பம் அறவிடப்படுகின்றது – படைத்தரப்பு தகவல்
- அரசாங்கத்தினால் சமர்பிக்கும் கணக்கறிக்கைக்கு எதிராக வாக்களிப்போம் – ஐ.தே.க, மற்றும் ஜே.வி.பி
- புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக கூட்டுறவுச் சங்க முகாமையாளர் கைது
- தென்னைமரங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை ஆராய இந்திய விஞ்ஞானிகள் குழு இலங்கை வரவுள்ளது
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக