தற்போதைய தகவல்
புதன், 3 ஏப்ரல், 2013
புதிய வலைத்திரட்டி அறிமுகம்
செய்தியோடை மூலம் எளிதில் இடுகைகள் திரட்டப்படும்.. மீனகம் திரட்டி
http://thiratti.meenakam.com/
புதன், 25 ஜூலை, 2012
ஈழத்தமிழர்கள் ஆபத்துக்கள் நிறைந்த படகுப்பயணத்தை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
ஈழத்தமிழர்கள் ஆபத்துக்கள் நிறைந்த படகுப்பயணத்தை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்களே அதிகம் செல்கின்றனர். இதுவரை, சிறிலங்காவைச் சேர்ந்த 1541 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது 700 பேர் அதிகம் பயணமாகியுள்ளனர்.தயவுசெய்து தேர்தலுக்கு முன் எம்மை மீள்குடியேற்றவும் – சம்பூர் மக்கள்
திருகோணமலை – சம்பூர் பகுதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் மோதல்களின்போது இடம்பெயர்ந்த மக்கள் தம்மை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆஸிக்கு புகலிடம் கோரிச் சென்ற ஈழ கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதி
புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 141 பேருடன் நேற்று (22) கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பங்கேற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடாத்தப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்தது.மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)
23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் . 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கிநாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.தமிழ்நாடு
தனி ஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம்: மு.கருணாநிதி
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வரும் விவகாரம் தொடர்பாக டெசோ மாநாட்டில் தீவிரமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.மத்திய அரசு தலையிடாதவரை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் இல்லை… ஜெ. காட்டம்
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல், பிடித்துச் செல்லுதல் போன்றவற்றைத் தடுக்க இந்திய அரசாங்கம், இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு உளவுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கொல்கத்தா சென்ற சிறிலங்கா படையினர்
இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தனுஸ்கோடி அருகே நடுக்கடலில் சிறிலங்காவின் புதிய கடற்படைத்தளம்
இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்
1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம்கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை…!
கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழியை மத்திய அரசு அட்டகாசமாக பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில், சிங்கள படையினருக்குப் பயிற்சி தருவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், மக்களும் கூட கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்து வரும் நிலையில் அதை சற்றும் பொருட்படுத்தாமல், சிங்களப் படையினருக்குத் தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறது மத்திய அரசு. தற்போது புதிதாக 4 சிங்கள விமானப்படையினர் மேற்கு வங்கத்திற்குப் பயிற்சிக்காகப் போயுள்ளனர்.ஈழத்தமிழர்கள் ஆபத்துக்கள் நிறைந்த படகுப்பயணத்தை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
ஈழத்தமிழர்கள் ஆபத்துக்கள் நிறைந்த படகுப்பயணத்தை மேற்கொள்வதன் பின்னணி என்ன?
சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்களே அதிகம் செல்கின்றனர். இதுவரை, சிறிலங்காவைச் சேர்ந்த 1541 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது 700 பேர் அதிகம் பயணமாகியுள்ளனர்.
தயவுசெய்து தேர்தலுக்கு முன் எம்மை மீள்குடியேற்றவும் – சம்பூர் மக்கள்
திருகோணமலை – சம்பூர் பகுதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் மோதல்களின்போது இடம்பெயர்ந்த மக்கள் தம்மை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸிக்கு புகலிடம் கோரிச் சென்ற ஈழ கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதி
புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 141 பேருடன் நேற்று (22) கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பங்கேற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடாத்தப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்தது.
மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)
23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் . 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு
தனி ஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம்: மு.கருணாநிதி
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வரும் விவகாரம் தொடர்பாக டெசோ மாநாட்டில் தீவிரமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய அரசு தலையிடாதவரை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் இல்லை… ஜெ. காட்டம்
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல், பிடித்துச் செல்லுதல் போன்றவற்றைத் தடுக்க இந்திய அரசாங்கம், இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு உளவுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கொல்கத்தா சென்ற சிறிலங்கா படையினர்
இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தனுஸ்கோடி அருகே நடுக்கடலில் சிறிலங்காவின் புதிய கடற்படைத்தளம்
இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்
1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம்
கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை…!
கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழியை மத்திய அரசு அட்டகாசமாக பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில், சிங்கள படையினருக்குப் பயிற்சி தருவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், மக்களும் கூட கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்து வரும் நிலையில் அதை சற்றும் பொருட்படுத்தாமல், சிங்களப் படையினருக்குத் தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறது மத்திய அரசு. தற்போது புதிதாக 4 சிங்கள விமானப்படையினர் மேற்கு வங்கத்திற்குப் பயிற்சிக்காகப் போயுள்ளனர்.
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
வெள்ளி, 16 மார்ச், 2012
இன்னும் 15 மணித்துளிகளில் தமிழில் “இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கப்படாத போர் குற்றங்கள்”
தமிழில் "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கப்படாத போர் குற்றங்கள்"
சேனல் 4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்" தமிழில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் இன்று (16.03.2012) தாயக நேரம் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சியினை காண இங்கே அழுத்தவும்>>
மதுரையில் சோனியாகாந்தியின் உருவப்பொம்மையை எரித்த வழக்குரைஞர்கள்
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மேலும் »
ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்: தமிழக இளைஞர் காங்கிரஸ்
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு இளைஞர் காங்கிரசார் ஈரோட்டில் இருந்து தந்தி கொடுத்தனர். மேலும் »
இந்திய மத்திய அரசுக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அரசு கொண்டு வந்த போர்க்குற்ற எதிர்ப்பு தீர்மான நடவடிக்கையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (16.03.2012) மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும் »
லெப்.கேணல் ரவி வீரவணக்க நாள்
வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் மேலும் »
3 அகவை குழந்தையை நரபலி கொடுக்க மகிந்த திட்டம்…?
மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் 'மனித பலி" கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் »
போர்க்குற்றங்களைச் செய்யும் உரிமை சிறிலங்கா அரசுக்கு இல்லை – சனல் 4 ஆவணப்படத்தில் மில்லிபான்ட்
போர்க்குற்றங்களை செய்வதற்கு சட்டபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மல்லிபான்ட் தெரிவித்துள்ளார். மேலும் »
நம்பகமான – சுதந்திரமான விசாரணைக்கு பிரித்தானியா மீண்டும் அழைப்பு
சனல்4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் வெளியாகிய பின்னர், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் »
ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும் – ஹோம்ஸ்
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புகூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் ஐ.நா உதவிச்செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் »
படைமுகாமாக மாறிய முள்ளியவளை புதரிக்குடா மாவீரர் துயிலுமில்லம்
இடித்தகற்றப்பட்ட முள்ளியவளை புதரிக்குடா மாவீரர் துயிலுமில்லம் இருந்த இடத்தில் பாரிய படைமுகாம் ஒன்றினை அமைக்கும் செயற்பாட்டில் சிறிலங்கா படையினர் முனைப்புடன் செயற்பாட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
சனல் 4 மற்றும் சா்வதேச விசாரணை – த.தே.ம.மு ஊடக அறிக்கை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தும் சனல் – 4ன் ஆதாரங்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைத் தீவு தொடர்பான அக்கறை கூர்மையடைந்துள்ள காலகட்டத்தில், அமெரிக்காவின் தலைமையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. மேலும் »
போருக்குப் பிந்தைய ஈழத் தமிழர் நிலைமை… நெஞ்சை பிழியும் கொடூரம்!
தேசியத்தலைவர் பிரபாகரனின் 12வயது மகனான பாலசந்திரனை சுட்டுக் கொன்ற வீடியோ ஆதாரத்தை 'சனல் 4′ வெளியிட்டதை அடுத்து ஈழத்தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும் »
ஞானதேசிகனுக்கு சோனியா கடும் உத்தரவு! – வினோத்
தமிழ் நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மத்திய அரசின் போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது மக்கள் இயக்கமாக மாறும் தறுவாயில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் தூண்டுதல் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்தது நினைவிருக்கலாம். மேலும் »
குற்றவாளிகளிடமே நீதியின் விசாரணை! தீர்வு எவ்வாறு கிடைக்கும்?
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானம், அந்நாட்டைக் கண்டிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதல்ல என்றும் இந்த விவகாரம் குறித்து எல்லாப் பிராந்தியங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளையடுத்துப் பயனுள்ள பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன. மேலும் »
"இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கபடாத போர் குற்றங்கள்" – புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
சேனல் 4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கபடாத போர் குற்றங்கள்" புதியதலைமுறை தொலைக்காட்சியில் இன்று (15.03.2012) தாயக நேரம் இரவு 10.00 மணிக்கு காணொளி ஒளிபரப்பாகிறது. நாளை (16.03.2012) இரவு தமிழில் "இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கபடாத போர் குற்றங்கள்" சேனல் 4 நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காணலாம்… தொலைக்காட்சியினை காண இங்கே அழுத்தவும்…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் பட்டினிப்போர்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் »
இராமேசுவர மீனவர்கள் மீது குண்டுவீசிய சிங்கள அரச பயங்கரவாத கடற்படை
ராமேசுவரத்தில் இருந்து (14/03/2012) 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திþகும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே ஆறுமுகம் உள்பட 4 பேர் ஒரு படகில் இருந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இரவு 10 மணி அளவில் பிளாஸ்டிக் படகில் வந்த இலங்கை கடற்படையினர் இங்கு ஏன் வந்தீர்கள் என்று கூறி அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். மேலும் »
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் இனக்கலவரம் வரும் என்ற சம்பிக்கவின் கருத்து பாரதூரமானது – மனோ கணேசன்
உத்தேச ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றதை போல ஒரு இனக்கலவரம் வரலாம் என்று, தமிழ் மக்களை பயமுறுத்தும் தொனியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்து இருப்பது பாரதூரமானது. மேலும் »
தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் மன்னிப்பு கேட்டார்!
தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும் »
இந்தியப்பிரதமரின் உருவப்பொம்மை எரித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைது
தூத்துக்குடியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை எரித்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
செவ்வாய், 3 ஜனவரி, 2012
நியூசிலாந்தில் தமிழ்த் தம்பதிக்கு கிடைத்த மகாராணி விருது
தமிழ்ச் சமூகத்திற்கான கல்விச்சேவைக்காக ஜோர்ஜுக்கும் சமூக சேவைக்காக உமாவுக்கும் இந்தக் கௌரவம் கிடைக்கப்பெற்றுள்ளது.
1998 ல் நியூசிலாந்தில் குடியேறிய ஜோர்ஜ் அக்காலப்பகுதியில் இங்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் முறையாகத் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் வகையில் உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவரது சீரிய பணிகள் இவரை நியூசிலாந்துத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்கியதுடன் தமிழ்ச் சங்கத்தின் பணியினை மேலும் சிறப்பாக்கியது.
தமிழின் மீதும் தாயக மக்கள் மீதும் மிகுந்த நேசம் கொண்ட ஜோர்ஜ் இங்குள்ள தமிழ் மக்களுக்காகவும் தாயகத்திலிருந்து வரும் மக்களுக்காகவும் பல பொது அமைப்புகளில் இணைந்து அதில் பல முக்கிய பதவிகளை வகித்ததுடன் பல அரிய சேவைகளை மின்னாமல் முழங்காமல் பெற்றுக்கொடுத்துள்ளார்.
Ethnic Voice of New Zealand ,Tamil Community Education ,Consortium of Tamil Associations ,New Zealand Refugee Council,Auckland Regional Ethnic Council,Asian Social Services New Zealand, நியூசிலாந்துத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளில் முறையே நிறைவேற்றுப் பணிப்பாளர் குழு உறுப்பினர், பணிப்பாளர் சபை உறுப்பினர், இணைப்பாளர், தலைவர் போன்ற பல பதவிகளை வகித்தார்.
இந்தப்பதவிகள் மூலம் நியூசிலாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு குடியேற்றம் மற்றும் புது வாழ்க்கை முறைமை தொடர்பான பல கருத்தரங்குகளை அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தினார்.
இவற்றில் போரின் தாக்கத்தால் பாதிக்கப்படவர்களுக்கு இவர் ஏற்படுத்திக்கொடுத்த உளவளப் பயிற்சிச் செயலமர்வுகள் குறிப்பிடத்தக்கவை.
இவர் அமைத்த குடிவரவுக்குழு இங்கு வரும் தமிழ் மக்களுக்கும் அதேவேளை இங்கு குடியேறும் தமிழர்களின் பிரச்சனைகளை குடிவரவுத் திணைக்களம் அறிந்துகொள்ளவும் தக்க பயனுள்ளதாக அமைந்தது எனில் மிகையன்று.
நியூசிலாந்துப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட மூலம் சமர்பிக்கப்படவிருந்த வேளை ஜோர்ஜ் இங்குள்ள தமிழ்க் கல்விமான்களை உள்ளடக்கிய ஒரு குழுவினை அமைத்து விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கு எதிரான சந்திப்புக்களை ஏற்பாடு செய்தார்.
அத்துடன் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இங்கு வரவழைத்து நியூசிலாந்தின் முக்கிய பிரமுகர்களுடன் பேசவைத்தார். நியூசிலாந்து, தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்யாமைக்கு இவை வழிவகுத்தன.
நியூசிலாந்தின் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்திற்குத் தலைமை தாங்கி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்தாடல்களை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்தி தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் தனிநாட்டுக் கோரிக்கை பற்றியும் விளக்க ஏற்பாடுகள் செய்தார்.
கலாசார ஒருங்கிணைப்பும் பரிமாற்றமும் தொடர்பான கருத்தாடல்களை இங்குள்ள சமூகங்களுக்கிடையில் நடத்துவதில் முன்னின்றார்.
2003 இல் இவர் ஆரம்பித்த தமிழ்ச் சமூகத்திற்கான கல்வி அமைப்பு மூலம் அமைக்கப்பெற்ற பூங்கா பாடசாலை -மழலைகள் முதல் வயதானோர் வரையிலான பல கல்விச் செயற்பாடுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் முக்கிய அம்சமாக சர்வதேச ரீதியிலான தமிழ் அறிவுப்போட்டிகளும் பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றன. நியூசிலாந்தின் சிறப்புமிக்க தமிழ்ப் பாடசாலையாக இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராகப் பணியாற்றும் ஜோர்ஜ் அருளானந்தம் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மின்னியல் பொறியியற் பட்டதாரியுமாவார்.
இவரது துணைவியார் உமா 90 களின் இறுதிப்பகுதி முதல் இங்கு வரும் அகதிகளுக்கு அவர்களின் புது வாழ்விற்கான உதவிகளை வழங்குவதில் தொண்டராகச் செயற்பட்டு வந்தார். இவர் மவுண்ட்ரொஸ்கில் சமூக சபை உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
நியூசிலாந்து ஆசிய சமூக சேவை நிறுவனம் தேசிய அகதிகள் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். Auckland Refugee Community Coalition அமைப்பின் உப தலைவராக பணியாற்றிய வேளை அகதிகள் சமூகங்களுக்கான முன்பள்ளிப் பாடசாலை ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.
அகதிகள் மீள் குடியேற்றத்தை வலுப்படுத்தல் தொடர்பில் பல சமூகங்களையும் கொண்ட அகதிகள் பெண்கள் குழாம் ஒன்றை ஆரம்பித்தார்.
தமிழ் சமூகத்திற்கான கல்வி Tamil Community Education அமைப்பின் பூங்கா தமிழ்ப் பாடசாலையின் இணைப்பாளராகப் பணியாற்றிய இவர் நியூசிலாந்து ஆரம்பக்கல்விப் பாட விதானத்தைத் தழுவிய வகையில் தமிழ் மொழியைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் வகையில் முன்பள்ளியை இதில் ஆரம்பித்தார்.
இத் தமிழ்ப்பாடசாலை மூலம் இந்நாட்டின் கல்வி அமைச்சுடன் ஊடாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டார் ஆன் உமா ஜோர்ஜ் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாகப் பல வெளிநாட்டு மாநாடுகளிலும் கருத்தாடல்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த வேளை Association of Medical Doctors of Asia (AMDA) அமைப்பின் தொண்டராகத் தாயகம் சென்று பணியாற்றினார். இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரையை இவர் 2005 இல் ஜப்பானில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார்.
ஜெனீவாவிலுள்ள ஐ நா தலைமையகத்தின் அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடனான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். சூரிச்சில் நடைபெற்ற ஜெனிவா கோல் ‘Geneva Call '2006 மாநாட்டிலும் பங்குபற்றினார்.
Asian Pacific Refugee Right Network (APRRN) அமைப்பின் உறுப்பினரான இவர் தாய்லாந்தில் நடைபெற்ற அகதிகள் உரிமை தொடர்பான ஆலோசனை அமர்விலும் கலந்துகொண்டார். ஆசிரியையான ஆன் உமா ஜோர்ஜ் சமூக சேவையில் உள்ள ஆர்வம் காரணமாக சமூகப்பணியில் பட்டதாரியானார்.