இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட சிறீலங்காவில் எங்குமே தமிழர்கள் சுதந்திரமாக அச்சமின்றி நடமாடக்கூடிய நிலைமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.
வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…
'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார்.
மேலதிக செய்திகள்
- கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளத்தில் புதிய சிறைச்சாலைகள்
- சிறீலங்கா – தமிழீழம் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது – ஹிந்துஸ்தான் டைம்ஸ்
- சர்வதேச மன்னிப்புச்சபையின் ஏற்பாட்டில் "முகாம்களைத் திறந்து விடுங்கள்" தொடர் ஆர்ப்பாட்டம்
- சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறுமாதம் நிறைவு
- ஓசியானிக் வைகிங் கப்பலில் இருந்த 78 அகதிகளும் கரை இறங்கினர்: விரைவில் ஆஸி ஏதிலி அந்தஸ்து வழங்கும்
- பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) இல்லாமல் சென்ற பயணிகள் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்
- மஹிந்தவும் 3 சகோதரர்களும்!
- அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்
- தேசியத் தலைவரின் புகைப்படக் கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளனவா?
- தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நெருக்கடி!
- டென்மார்க் தமிழர் பேரவை ஊடக அறிக்கை
- புலம்பெயர் தமிழீழமே ஒன்று சேருங்கள்!
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக