வெள்ளி, 20 நவம்பர், 2009

[20.11.1999] மடுத்தேவாலயப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு

traitor001தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே எழுந்துள்ள எழுச்சியையும் சிங்கள அரசுக்கு எதிரான மீனவர் போராட்டத்தையும் மழுங்கடிக்கவும் அதை திசை திருப்பவும் நிகழ்வுகள் நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. விரிவு… »


பிரதான செய்திகள்

attacked fishermen[படம்] தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி சிறீலங்கா கடற்படையினர், கடந்த புதன் கிழமை இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர்.
20 November 2009
poster_karuna[படம்] விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மு.கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பலத்த கண்டனம் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.
19 November 2009
muthukumaranதமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
19 November 2009
P.M.Amzaதமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது.
19 November 2009


ஏனைய செய்திகள்

ltte_logoசிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 November 2009
Amnesty Logo - Global Identityவெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலிகளின் விடுதலைக்கு உடன் வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
20 November 2009
sarathஓய்வுபெற்ற சரத்பொன்சேகா படையினருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிவைத்துள்ளாராம். அப் பிரியாவிடைக் கடிதத்தில் நாட்டில் ஜனநாயகத்தை கட்டி எழுப்பும் படியும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் படியும் மற்றும் மூவின மக்களும் சரி சமனாக நடத்தப்படவேண்டும் எனவும் படையினரைக் கோரியுள்ளாராம்.
20 November 2009
divainaவிடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது என்பதை வெளிக்காட்டும் நோக்கில் கொழும்பு நகரில் பாரிய குண்டு வெடிப்பை நிகழ்த்தவிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என திவயின குறிப்பிட்டுள்ளது.
20 November 2009
us flagசிறீலங்காவுக்கு தமது நாட்டுப் பிரஜைகள் செல்வது, மற்றும் அமெரிக்க அதிகாரிகள் செல்வது குறித்த பயண எச்சரிக்கையில் எது வித மாற்றங்களும் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
20 November 2009
madu_churchஇலங்கை தீவில், சிங்கள மற்றும் இந்திய இராணுவத்தினாலும், இனவெறியர்களாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் 150000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
20 November 2009
tissainayagamதமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடானது நிலுவையில் உள்ள இச்சமயத்தில் அவரைப் பிணையில் விடுவிக்கவேண்டும் என வழங்கிய மனுவை மேல்நீதிமன்றம் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தள்ளிவைத்துள்ளது.
20 November 2009
Mangala_Samaraweeraஅப்பாவித் தமிழ் மக்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்து வைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளை கண்டால் வாரியணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார். இவ்வாறு நடந்துகொள்வதில் வெட்கமில்லையா? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம். பி. தெரிவித்தார்.
20 November 2009
Medicinesஇந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
20 November 2009
europe_flagசிறீலங்காவுக்கு எதிர்வரும் 2010ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 November 2009
smkrishnaசிறீலங்கா சிறைகளில் இருந்து சுமார் 40க்கும் அதிகமான இந்திய கைதிகளை மீட்பதற்காக சிறீலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
20 November 2009
viking_shipஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு எதிராக, பெண்களையும், சிறுவர்களையும் நடமாட முடியாதபடி தற்காலிக தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த பெண்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
20 November 2009
mp_sivasakthianandanஇராணுவத்தினரின் வழிகாட்டுதலுடனான பயணம் என்பதால் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்குச் செல்வதற்கான அழைப்பைத் தான் நிராகரித்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
20 November 2009
death_certificateவன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு மக்கள் பிரதேச செயலகங்களுக்கும், பதிவாளர் அலுவலகத்துக்கும் அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்கள் வீண் சிரமங்களுக்கு உள்ளாவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.
20 November 2009
sarath-ponseke_sசரத் பொன்சேகாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதால், மிகக் குறுகிய காலத்தில் பொருத்தமான வீடொன்றைப் பெறுவதில் அவர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
20 November 2009
n-19112009-onray eluvam-02s1945ல் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்த வேளையில் பிரித்தானிய மக்கள் ஒரு மிகப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தனர். போர்மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் (Winston churchil) அவர்களை அரசியலிலிருந்து ஓய்வு நிலைக்கு அனுப்பிவிட்டு கிளெமன்ட் அட்லீயை (Clemnt Attee) பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர்.
20 November 2009
uthayan_logoஇலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரி விக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.
20 November 2009
anoma_fonsekaமுன்னாள் சிறீலங்காப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் ரணவிரு சேவா அதிகார சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து நேற்று வியாழக்கிழமை பதவி விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
20 November 2009
john holmesயுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட சிறீலங்காவில் எங்குமே தமிழர்கள் சுதந்திரமாக  அச்சமின்றி நடமாடக்கூடிய நிலைமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
20 November 2009
vaiko1தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.
20 November 2009

--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக