செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மீள்குடியேற்றத்திற்கு காலக்கெடு இல்லை – சிறிலங்கா

வவுனியாவில் உள்ள முகாம்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

Google Buzz
23 February 2010

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Buzz
23 February 2010

தமிழீழப் பகுதியான வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அதிகளவில் உற்பத்தியாகும் ரியுனா எனப்படும் அரிய வகை மீனினத்தைச் சேர்ந்த மீன்களை பிடிப்பதற்கு முக்கிய நாடுகள் போட்டியிடுவதாக அறியப்படுகிறது.

Google Buzz
23 February 2010

சிறீலங்காவில் முன்னாள் இராணுவத்தளபதி கைது செய்யப்பட்ட முறை மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி அடையவில்லை என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் பி.பி.சி நிறுவனத்திற்கு தொவித்துள்ளார்.

Google Buzz
23 February 2010

யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பூநகரி நோக்கி சென்றுகொண்டிருந்த சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்றுக்காலை கிளிநொச்சி குச்சுப்பரந்தன் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 12 பேர் படுகாயமடைந்தனர்.

Google Buzz
23 February 2010

பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

Google Buzz
23 February 2010

விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.

Google Buzz
23 February 2010

நடைபெறப்போகும் சிறிலங்காவின் நடாளுமன்றத்ததேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் பொருட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

Google Buzz
23 February 2010

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பலரும் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டனர். எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி நிறைவடைய வேண்டியதாக இருந்த போதிலும் சில சுயேட்சைக் குழுக் கள் பன்னிருவர் இல்லாமல் ஆட்களைத் தேடுவதாகத் தகவல். இது ஒருபுறம், மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதான தகவல்.

Google Buzz
23 February 2010

எதிர்வரும் ஏப்றல் மாதம் நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலுக்காக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 22 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
23 February 2010

தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

Google Buzz
23 February 2010

சிறீலங்கா கிறிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் திலகரட்ணவுக்கு அரசியல் காரணமாக சிறீலங்கா அணியின் முகாமையாளர் பதவி கொடுக்காத அரசாங்கம் சனத் ஜெயசூரியவுக்கு மாத்திரம் அனுமதி அளித்துள்ளமை பாரபட்சமானது என முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் அர்ஜன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Google Buzz
23 February 2010

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வாரஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார்.

Google Buzz
23 February 2010

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சில புதிய பாடங்களையும் நமக்குப் போதித்திருக்கின்றன என்பது உண்மைதான். இந்தத் தேர்தல் முடிவுகளின்படி வடக்கு, கிழக்குப் பிரதேசங்களான தமிழர் தாயகம், தென்னிலங்கையி லிருந்து கருத்தியல் ரீதியாக வேறுபட்டிருக்கின்றது என் பது வெளிப்படையாகத் தெளிவுபட்டிருக்கின்றது.

Google Buzz
23 February 2010

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவென புதுமுகம்கள் அறிமுகப் படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக அறி முகப்படுத்தப்படுபவர்கள் யாழ். சமூகத்துடன் நல்லுறவை பேணி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல புது முகம்களை களத்தில் இறக்கியுள்ளனர்.

Google Buzz
23 February 2010

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

Google Buzz
23 February 2010

சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மேற்கொண்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு "உள்ளாடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி" என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது.

Google Buzz
22 February 2010

பினாங்கு மாநிலத்திலுள்ள வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கு தேவையான நிலத்தை வழங்க மாநில மக்கள் கூட்டணி அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும். அதற்கான அடிப்படை வேலைகள் எந்தவொரு கணக்கமுமின்றி நடைபெற்று வருவதாக பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.

Google Buzz
22 February 2010

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்று தோழர் பகத்சிங் சொல்வார். எந்த ஒரு போராட்டமும் தமது எதிரியாலேயே முன்னோக்கி தள்ளப்படுகிறது. தமிழீழம் என்கிற முழுமை பெற்ற ஒரு வார்த்தை அல்லது ஒரு லட்சியம் சிங்கள பேரினவாதத்தின் கடும் போக்காலேயே நம் ஆழ் மனங்களிலே வேரூன்றிவிட்டது.

Google Buzz
22 February 2010

குடியிருப்புகள் இன்றி அலையும் தமிழ் மக்களை இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் குடியமர்த்தி அவர்களின் வாழ்வையும், வாழ்வு ஆதாரகளையும் கட்டி எழுப்புவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தலத் திருச்சபை அறிவித்துள்ளது.

Google Buzz
22 February 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக