வியாழன், 14 ஜனவரி, 2010

நோர்வேயில் முதன்மை வெளிநாட்டவராக தமிழர்



பிரதான செய்திகள்

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை "அய்யோ… தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்' என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.
14 January 2010
'ஜனாதிபதி ராஜபக்ஷேவைப் போற்றும் வகையில் இயற்றப் பட்ட 'வணக்கம் மாமன்னரே' என்ற பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி ரோசனா கமகே ரகசிய இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
13 January 2010
"எல்லாம் இழந்தவனின் கைகளிலிருந்து இனி எடுப்பதற்கு எதுவுமில்லை. ஆனாலும், அவன் கைகளையும் அறுத்துப் போடும் வேதனையாகக் காலம் நடத்தும் சோகங்களை எங்கே போய்ச் சொல்வது? சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு… கண்ணீரில் தத்தளித்துக் கிடக்கிறது ஈழ தேசம். அதன் ரணத்தைக் குத்திப் பார்க்கும் கொடூரமாக ஈழத்திலிருந்து வந்த செய்தி, மொத்தத் தமிழர்களையும் மறுபடி உயிர்வதையில் ஆழ்த்தி விட்டது!" என்று நீண்ட பெருமூச்சோடு சென்னை விமான நிலையத்தில் நம்மை எதிர்கொண்டார் திருமாவளவன்.
13 January 2010
தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். ஆனால் இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் இருக்கிறார்கள்.
13 January 2010


[படம் - ஒலி] மன அழுத்தம் இராணுவ அழுத்தம் காரணமாக உயிர் நீத்த தேசியத் தலைவரின் தந்தை  அவர்களின் மரணத்திற்காக யாழ் சென்றிருந்த தமிழக சட்டவாளர் சந்திரசேகர் அவர்கள், ஈழமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேர்தலில் சிங்கள மக்களின் நிலைப்பாடு, தாயார் பார்வதி அம்மையாரின் உடல் நிலை மனநிலை பற்றி மீனகம் இணையத்தளத்திற்கு வழங்கிய உரையாடல். விரிவு… »


ஏனைய செய்திகள்

[படம்] தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
14 January 2010
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
14 January 2010

தமிழன் -
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
'ஹேப்பி பொங்கலி'ன் சப்தம்;


திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் -
சூரிய வெளிச்சத்திற்கு -
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு…………. வாழ்வு பொங்கட்டும்!

அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி -

அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…

வித்யாசாகர்
14 January 2010
பத்தரமுல்ல பிரதேசத்தில் டெலர் இயந்திரத்தில் வைப்புச் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 72 லட்ச ரூபா பணம் ஆயுதமுனையில் இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 January 2010
சிறிலங்காவில் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட திகதியிலிருந்து இன்றுவரையில் தேர்தல் வன்முறை தொடர்பாக 190பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
14 January 2010
சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர், அதன் காரணமாக சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது.
14 January 2010
இன்று தைத்திங்களின் முதல் நாள். தைப்பொங்கல் திருநாள்.  மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாளும் இதுவே. தமிழர்களின் ஆண்டுக்கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' தொடங்கும் முதல் நாளும் கூட இதுதான்.
14 January 2010
கடந்த வருடம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராசபக்ச இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார் என சிறீலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.
14 January 2010
தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் 9 நாளாகத் தொடர்கின்றது. உண்ணாநிலைப் போராட்டத்தினால் உடல் நிலை மோசமடைந்த நிலையில் 57 கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 January 2010
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் சிறீலங்காவின் ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்த விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
14 January 2010
எதிர்க்கட்சிகளின் அரச அதிபர் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, அரச அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என தீர்ப்பளிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
13 January 2010
1990ஆம் ஆண்டுமுதல் மக்கள் பாவனைக்குத் தடுக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த யாழ்ப்பாணம் வலி . வடக்குப் பகுதியில் கணிசமான பிரதேசத்தில் நேற்றுமுதல் மீளக்குடியமர்வுக்குப் பூர்வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தெல்லிப்பளையில் இருந்து மாவிட்டபுரம் வரை கே.கே.எஸ். வீதியின் மேற்குப்புறமாகவுள்ள இடங்களில் மீள்குடியமர்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
13 January 2010
சிறிலங்காவில் நிராயுதபாணிகளான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் "சனல் 4″ ஒளிநாடா உண்மையானது என வெளியான அறிக்கையிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன், அறிக்கையை வெளியிட்ட பிலிப் அல்ஸ்ரொன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
13 January 2010
மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முக்கிய ஐந்து அரச ஊடக பணிப்பாளர்கள், மற்றும் முக்கிய மூன்று விளம்பர நிறுவன பணிப்பாளர்கள் அவுஸ்ரேலியா செல்ல சிறிலங்கா அரசாங்கம் விசா ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
13 January 2010
சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களிற்கிடையே பொலனறுவைப் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கியதேசியக்கட்சியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து பேரணி ஒன்று நடந்துகொண்டிருக்கையில் அந்த பேரணியை ஊடறுத்து ஆளும் கட்சியின் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சென்ற வேளை இந்த சம்பவம் நடந்துள்ளது.
13 January 2010
விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசுக்கு உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்ட காலம் வெறுமனே தடுத்து வைத்து இழுத்தடிக்க முடியுமா? என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் பிரதம நீதியரசர் அசோகா என். சில்வா.
13 January 2010
எதிர் வரும் அரச அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் தரப்பாக தமிழ் மக்கள் மாறியுள்ளதாக தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
13 January 2010
எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருவதால் நாட்டை விட்டு தப்பியோடும் நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிறிலங்காவின் சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் முயற்சித்து வருவதாக தகவல் கசிகிறது.
13 January 2010
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர் படகுகளின் வலைகளை சிறீலங்கா கடற்படையினர் வெட்டி கடலில் மூழ்கடித்தனர்.
13 January 2010
பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக