சனி, 16 ஜனவரி, 2010

தேர்தல் ஆணையரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும் – உச்ச நீதிமன்றம்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைத்து ஊடகங்களும் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை மதித்து நடக்குமாறு சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 January 2010
எதிர்வரும் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டதாக தபால் மா அதிபர் தெரிவிக்கின்றார்.
16 January 2010
எதிர்வரும் அரச அதிபர் தேர்தல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக்
16 January 2010
[படங்கள்] மெல்பேர்ணில் நடைபெற்ற தமிழ் தேசியத் தலைவருடைய தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு, அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில வணக்க நிகழ்வுகள் என்று 15.01.2010 அன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
16 January 2010
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்."  என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
16 January 2010
அயர்லாந்து டப்ளின் நகரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்குமாறு நோர்வே தமிழர் சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிறிலங்கா அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
15 January 2010
இழந்த எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் உறுதியை நிறுத்தி தமிழ்த்தேசியம் காப்போம் என தமிழர் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவையொட்டிய ஊடக அறிக்கை
15 January 2010
அடிப்படை வசதிகளின்றி அலை மோதும் கூலாய் பெசார் தோட்டத் தமிழ் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டும் திட்டம் காலம் கடந்து போனால் அப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் பெரும் வீழ்ச்சி அடையக்கூடும் என்று பள்ளித் தலைமையாசிரியர் கே. முனுசாமி எச்சரித்துள்ளார்.
15 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மா அவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் நோக்கம் இல்லை என்றும் அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதென்றால் கூட சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
15 January 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நேற்று முன்தினம் வவனியா மாவட்ட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
15 January 2010
பத்துமலை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 6.30 மணிக்கு இறக்கி விடப்படும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினார்.
15 January 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ளார்.
15 January 2010
அரசியல்வாதி என்பதனை  விடுத்து தன்னை ஒரு நடிகனாகவே அரசு சித்தரிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சகல இனங்களுடனான தமது அரசியல் பயணத்தையும் வெற்றி இலக்கையும் வன்முறைக்கலாசாரத்தால் தடுத்து விடமுடியாத எனவும் அவர் தெரிவித்தார்.
15 January 2010
நாட்டின் எதிர்காலத்தில் இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையென தாம் உறுதியளிப்பதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறையில் நகர சபை மைதானததில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
15 January 2010
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்ட மாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திவிட்டார்.
15 January 2010
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும்  அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல.  அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.   நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
15 January 2010
இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உதவியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் மேலதிக விபரங்களை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
14 January 2010
சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராசபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
14 January 2010
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகள் எதிர்வரும் அரச அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராசபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஒட்டுக்குழுவான ஈரோஸ் அமைப்பினர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
14 January 2010
கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற சிறைச்சாலைகளிலும் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் தமது போராட்டத்தை இன்று பிற்பகல் முதல் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக