சனி, 21 நவம்பர், 2009

ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கைக்கு உதவியாக கொட்டிக் கொடுக்கும் இந்திய அரசு, நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்? – இயக்குநர் சீமான்

indo_shipஇந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 ஏதிலிகளும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.
21 November 2009
tamileelam_rs1000_fake_frontதமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என தமிழர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார்.
21 November 2009
lashkaretaibaசிறீலங்காவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகமான கிழக்கிலங்கையில் சர்வதேசநாடுகளிலும் இந்தியாவிலும் இயங்கும் லக்சர் ஈ தொய்பா என்னும் அமைப்பு இயங்கிவருவதாகவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
21 November 2009
seemaan001_sஈழ மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட் களோடு வந்த 'வணங்கா மண்' கப்பல் யாருடைய உதவியும் இல்லாததால் எப்படி நடுக்கடலில் தத்தளித்து நின்றதோ… அதேபோல் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக 255 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த 'ஓஷியானிக் வைக்கிங்' என்கிற கப்பலும் பரிதாபத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
21 November 2009
karuna_rajapakse'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.
21 November 2009
camp_woman23வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
21 November 2009
refugeesவடமராட்சி கிழக்கு நாகர்கோவிலுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தென்மராட்சி மிருசுவில், கொடிகாமம் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களை ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமான மணல்காடு பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியுள்ளார்.
21 November 2009
mullivaaikkaalசிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக்கும் திட்டத்தின் பின்னணியில் ஜயந்த ஞானக்கோன் இருப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
21 November 2009
sarath-ponseke_sஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது கடினம் என்று அரசாங்கத் தரப்பிற்கு நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
21 November 2009
jvpflag_thumbnailசரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
21 November 2009
USA_butenisசிறீலங்காவின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா நேற்று மாலை, சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸை சந்தித்துள்ளார்.
21 November 2009
norway-flagஇன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என நேற்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 November 2009
Amnesty Logo - Global Identityவெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலிகளின் விடுதலைக்கு உடன் வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
20 November 2009
sarathஓய்வுபெற்ற சரத்பொன்சேகா படையினருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிவைத்துள்ளாராம். அப் பிரியாவிடைக் கடிதத்தில் நாட்டில் ஜனநாயகத்தை கட்டி எழுப்பும் படியும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் படியும் மற்றும் மூவின மக்களும் சரி சமனாக நடத்தப்படவேண்டும் எனவும் படையினரைக் கோரியுள்ளாராம்.
20 November 2009
divainaவிடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது என்பதை வெளிக்காட்டும் நோக்கில் கொழும்பு நகரில் பாரிய குண்டு வெடிப்பை நிகழ்த்தவிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என திவயின குறிப்பிட்டுள்ளது.
20 November 2009
us flagசிறீலங்காவுக்கு தமது நாட்டுப் பிரஜைகள் செல்வது, மற்றும் அமெரிக்க அதிகாரிகள் செல்வது குறித்த பயண எச்சரிக்கையில் எது வித மாற்றங்களும் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
20 November 2009
madu_churchஇலங்கை தீவில், சிங்கள மற்றும் இந்திய இராணுவத்தினாலும், இனவெறியர்களாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் 150000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
20 November 2009
tissainayagamதமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடானது நிலுவையில் உள்ள இச்சமயத்தில் அவரைப் பிணையில் விடுவிக்கவேண்டும் என வழங்கிய மனுவை மேல்நீதிமன்றம் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தள்ளிவைத்துள்ளது.
20 November 2009
Mangala_Samaraweeraஅப்பாவித் தமிழ் மக்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்து வைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளை கண்டால் வாரியணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார். இவ்வாறு நடந்துகொள்வதில் வெட்கமில்லையா? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம். பி. தெரிவித்தார்.
20 November 2009
Medicinesஇந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
20 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக