சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்ந்த ராசபக்சவுடன் வர்த்தக உறவு கலந்துரையாடலில் பங்குபற்றியதற்காகவும் அதன் செய்தியினை முன்பக்கத்தில் பிரசுரித்தமைக்காகவும் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை தாக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பகுதியில் 19 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளை சிறிலங்கா காவல்துறையினர் கைப்பற்றியபோது தப்பிச்சென்றதாக கூறப்படும் சிற்றூர்தி சிறிலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அந்த கூட்டமைப்பிலிருந்து விலகப்போவதாக தெரியவருகின்றது. இதன்படியாக எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படாது என தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கின்றார்.
விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.
75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கில் தனித்து போட்டியிட அரசுடன் இணைந்து இயங்கிவரும் துணை இராணுவக்குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக