ஞாயிறு, 17 ஜனவரி, 2010

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் கொலை

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
17 January 2010
வவுனியா- கோகலியா 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
17 January 2010

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மூடிமறைப்பை மேற்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியான சோனாலி விக்கிரமதுங்க மகிந்த ராசபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.
17 January 2010
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.
17 January 2010
சிறிலங்காவில் அரச படைகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இறுதி யுத்தத்தின்போது பல வழிகளிலும் சிறிலங்காவிற்கு உதவிபுரிந்த, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்துள்ளன.
17 January 2010
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது.
17 January 2010
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (Permanent Peoples' Tribunal)சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை முடிவுகளை தை 16ம், திகதி மாலை 2.00 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
17 January 2010

மலையாள மைந்தனாம் எம்ஜிஆர்
மலையாக உயந்தார் – தமிழகத்தில்
17 January 2010
எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடுநிலையானது என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 January 2010
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
17 January 2010
மாதந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் பேட்டி தொடர்கிறது.
16 January 2010
ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கும், ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டு, மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
16 January 2010
எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைத்து ஊடகங்களும் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை மதித்து நடக்குமாறு சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 January 2010
எதிர்வரும் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டதாக தபால் மா அதிபர் தெரிவிக்கின்றார்.
16 January 2010
எதிர்வரும் அரச அதிபர் தேர்தல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக்
16 January 2010
[படங்கள்] மெல்பேர்ணில் நடைபெற்ற தமிழ் தேசியத் தலைவருடைய தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு, அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில வணக்க நிகழ்வுகள் என்று 15.01.2010 அன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
16 January 2010
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்."  என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
16 January 2010
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
16 January 2010
அயர்லாந்து டப்ளின் நகரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்குமாறு நோர்வே தமிழர் சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிறிலங்கா அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
15 January 2010
இழந்த எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் உறுதியை நிறுத்தி தமிழ்த்தேசியம் காப்போம் என தமிழர் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவையொட்டிய ஊடக அறிக்கை
15 January 2010


மேலதிக செய்திகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக