பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர். விரிவு… »
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படங்களுடனான ஏராளமான டிஜிட்டல் பதாதைகளை சென்னை நகரில் இருந்து அகற்ற தமிழ் நாடு கியூ பிரிவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன.
சிறிலங்கா அரசத்தலைவர் மகிந்த ராஜபக்சேவைப் போற்றும் வகையில் இயற்றப்பட்ட வணக்கம் மாமன்னரே ! என்ற சிங்களப் பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி கமகேவுக்கு மகிந்த ராஜபக்சேவின் பாரியாரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான படுகொலைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சாவே காரணம் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (4) கம்பல் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மாநாடு இருக்கும் நிலைகளை எல்லாம்விட்டு தமிழீழம் அமைவதற்கு எதிரான கருத்தியல் மாநாடாக அமைந்திருந்தது.
பகாங்கெமாயான் வட்டாரத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிக்கான நிலமும் மானியமும் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டடம் எழுப்பப்படாமல் இருப்பது குறித்து
எதிர்வரும் சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக சிறீலங்கா தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவை வழி நடத்தும் பி உதயகுமார் மற்றும் அவரது சகோதரர்களுடன் உறவுகளைச் சீர்படுத்திக் கொள்வதற்கு முதல் நடவடிக்கையை எடுப்பதற்கு டிஏபி தயாராக இருக்கிறது.
தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான காரணம் என்னவென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சிறீலங்கா அரசத்தலைவர் மகிந்த ராஜபக்சே தற்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது மீண்டும் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும் சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில் அவருக்கான காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வவுனியா மிக முக்கிய பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது தென்னிலங்கையையும் தமிழர் தாயகத்தையும் இணைக்கும் பகுதியாக இது இருந்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலைசெய்து உயிரிழந்துள்ளனர். வசாவிளான் இராணுவ மருத்துவமனையில் கடமையாற்றிய கோப்ரல் தரத்தைச் சேர்ந்த படையினர் ஒருவர் தனக்கு நஞ்சு மருந்தை ஏற்றி தற்கொலை செய்துகொண்டார்.
இந்தோனேசியாவில் Bintan in the Sumatran Kepulauan Riau province எனும் இடத்தில் 11 ஈழத் தமிழர்களை தாம் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத்திட்டங்களும் சமாதான வழிமுறைகளும் அடங்கிய ஆவணம் ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கையளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழில் தற்போதுள்ள நூல்களில் தலைமுதல் நூலான தொல்காப்பியத்தின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பட்டதாக ஆய்வுகள் கணக்கிடுகின்றன. மூவாயிரம் வருடங்களுக்கு இத்தாலியில் வெடித்துச் சிதறிய தீக்குழம்பினல் கருகிப்போய், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள பொம்பே நகரின் நாகரிக அமைப்பைக்கண்டு இன்றைய உலகமே வியந்து நிற்கிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மூலம் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்குக கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி கொடுங்கோலன் ராஜபக்சவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வாறு தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்பார்ந்த யேர்மன்வாழ் தமிழீழ மக்களே! தமிழீழ தாயகத்தைக் களமாகவும், தளமாகவும் கொண்டு கடந்த ஆறு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிமுறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான பெரும் கடப்பாட்டை இன்று நாம் அனைவரும் சுமந்துநிற்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் போர் காரணமாக மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில 1994ம் ஆண்டு சூரியக்கதிர் படை நடவடிக்கையினை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் வலிகாமம் பகுதியினை வல்வளைத்திரந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக