புதன், 13 ஜனவரி, 2010

தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் நான் பணியை விட்டு விலகிவிடுவேன்: தேர்தல் ஆணையாளர் மிரட்டல்

எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் தான் பதவியில் இருந்து ஒதுங்கப்போவதாக சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
13 January 2010
அரச  தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்பாகத நடாத்த திட்டமிட்டுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
13 January 2010
இந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால கைது செய்யப்பட்ட 186 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
13 January 2010
தமிழராகிய எம்மைப் பொறுத்தவரை வேட்பாளர் எவராயிருப்பினும் எவ்விதத் தேர்தலுக்கும் இது உகந்த நேரமில்லை. தமிழரது மரபுவழித் தாயகத்தில் வாழ்வோர் போரினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து முற்றாக மீளாதுள்ளனர்.
13 January 2010
நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் நாயின் எந்த உடல் பாகத்தில் பட்டாலும் நாய் தனது காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள்.அது போலத்தான் தென்னிலங்கை அரசியல் தலை வர்களும். அவர்களுக்கு இடையேயான ஆட்சி அதிகாரத் துக்கான போட்டி என்று வந்தவுடன் அவர்கள் உருட்டு வது சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களின் விவகாரத்தைத்தான்.
13 January 2010
விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசில் உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்டகாலம் வெறுமனே தடுத்து வைத்திருக்க முடியுமா என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் அசோக என். சில்வா கேள்வி எழுப்பினார்.
13 January 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவெ தொடர்ந்தும் இருந்து வருவதாக புளொட்ட அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் குறிப்பிட்டுள்ளார்.
12 January 2010
முருகன் தமிழ்க் கடவுள். அவனே தமிழின் மன்னன். அவன் வீற்றிருந்து அரசாட்சி புரியும் இடம் நல்லூர். தமிழ் மன்னன் சங்கிலியன் நல்லூரைத் தன் இராசதானியாகப் பிரகடனம் செய்ததும் தமிழ்க் கடவுள் அங்கு வீற்றிருந்ததனால் என்ற முடிபுக்கு நாம் வரலாம்.
12 January 2010
தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரும் தேசிய தலைவரின் மனைவி மதிவதனியின் தாயாரும் அவர்கள் விரும்பினால் இந்தியா செல்லலாம் என்று அரச தலைவர் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார்.
12 January 2010
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள திருத்துவக் கல்லூரியில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சிறிலங்காவின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நிரந்தர மக்கள் நீதிமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
12 January 2010
முன்னாள் போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மகிந்த விடுத்த அறிவிப்பை அடுத்து, அன்றைய கூட்டத்தில்வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் மீண்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
12 January 2010
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்து பேரூந்து பிரச்சனை காரணமாக  மலேசியா கோலமூடா கோம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
12 January 2010
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அம்பலப்படுத்துமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.
12 January 2010
மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் கேட்கப்படும் கேள்விக்கு ஒளிவு மறைவின்றி பதிலளிக்கப்படும் என பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
12 January 2010
மலேசியாவிலுள்ள 'அகத்தியன் ஷெல்டர்' ஆசிரமத்தில் உள்ள மூன்று தமிழ்ச் சிறுவர்களுக்குப் பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் எந்தப் பள்ளிக்கூடமும் இடம்கொடுக்க மறுக்கிறது. என்று அகத்தியன் ஷெல்டர் ஆசிரமத்தின் பொறுப்பாளர் பி.சிவபாலன் முறையிட்டார்.
12 January 2010
சோகங்கள், இழப்புக்களென பலவகையான வலிகளை அனுபவித்த எமக்கு வீரத்தந்தை எமது தேசிய தலைவரை எமக்களித்த எமது தலைவரின் தந்தையின் இழப்பு மிகப்பெரும் இழப்பாக தமிழீழ மக்களால் அனுபவிக்கப்பட்டது. தமிழினத்துக்காக எமக்காக நாம் தலைநிமிர்ந்து உலகத்தில் தமிழன் என உரத்துக் குரல்கொடுக்கவும் அதை உலகம் கேட்கவும் எம்மை
12 January 2010
தம்மை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளில் 8 பேர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 January 2010
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்றமைக்காக 05 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டள்ளார்கள். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
12 January 2010
நடைபெறப்போகும் அதிர் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
12 January 2010
இலங்கையில் அமைதியும், சமாதானமும், சமரசமும், இணக்க நிலையும் நிலவவேண்டுமானால்  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால்  இனக் குரோதமும், பேரினவாதமும் ஒழிந்து, இன சௌஜன் யமும், நல்லிணக்கமும், புரிந்துணர்வும் மலரவேண்டும்.
12 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக