மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை சம்மந்தமாகவோ அரசியல் தொடர்பாகவோ எதுவும் பேசாத மகிந்த பொதுவாக உரையாற்றினார்.
குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களையும் சமூகமயமாக்கும் பொருட்டு விசேட வேலைத் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை என்று தனது உரையில் குறிப்பிட்ட மகிந்த நாட்டில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஒட்டுக்குழுக்களின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
கிழக்கு மாகாண சபை செயல்படுவதில் தற்போது நிர்வாக ரீதியான பிரச்சினைகள் எதிர்நோக்குவதால் எதிர்வரும் பதவிக் காலத்தில் அப்படியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளீதரன், ஏ.எல். அதாவுல்லா, எஸ்.எச்.அமீர் அலி உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் பின் காத்தான்குடிக்கு விஜயம் செய்த மகிந்த அங்கு பள்ளிவாசல் ஒன்றுக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார். தமிழினத்துக்கு துரோகம் செய்த ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் மகிந்தவிற்கு அருகில் இருந்து எம்மை அழித்தது மட்டுமல்லாது அதை கைதட்டி சிரித்து மகிழ்வதாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம் தென்படுகிறது.
ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
மேலதிக செய்திகள்
- தமிழ் தேசியத்தலைவருடன் பா.நடேசன், பழ.நெடுமாறன்
- மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோத குடியேற்றங்கள் – அரியநேத்திரன் தகவல்
- கோத்தபயாவின் மனைவி பணத்துடன் நாட்டைவிட்டு ஓட்டம்
- தேசியத்தலைவர் அவர்களின் தந்தையார் உடல் தீருவில் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- சிறீலங்கா சபாநாயகர் சென்ற வாகனம் மீது செருப்பு வீச்சு – 11 பேர் கைது
- யாழ். மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசு தற்போது அக்கறை
- புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிப்பு
- ஓமந்தை முதல் பளை வரை தொடரூந்து பாதை அமைக்கப்படவுள்ளது
- விழுப்புரத்தில் நடைபெற்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல்
- தமிழர் தரப்பின் தீர்மானம் எப்போதோ முடிந்த காரியம்!
- வெள்ளைமுள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்டது கடற்படையினரின் எம்-16 ரக துப்பாக்கி
- சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள்சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக