ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சிறிலங்காவில் சிறுபான்மை இனமென்று ஒன்றில்லையாம் – சொல்கிறார் மகிந்த

மன்னார் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தளர்த்தி சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பதாக அதிபர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகலில் மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
10 January 2010

[ஆடியோ] தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்ற சிறீலங்கா சபாநாயகர் லொக்கு பண்டாரநாயக வாகனம் மீது செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 January 2010

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் வெளி மாவட்டத்தவர்களின் சட்ட விரோதக் குடியேற்றங்கள் மீண்டும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
9 January 2010
எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோததபாயாவின் மனைவி
9 January 2010
யாழ். மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை மீளக்குடியேற்றும் பணிகள் தற்போது துவங்கிவிட்டதாக வடமாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார்.
9 January 2010
சிறிலங்காவில் புற்றுநோயின் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. வைத்தியசாலைகளில் மரணிக்கும் சம்பவங்களில் 10வீதமானவை புற்று நோயின் காரணமாகவே சம்பவிப்பதாக மேலும் தெரியவருகின்றது.
9 January 2010
ஓமந்தை முதல் பளை வரையிலான சுமார் 96 கிலோ மீற்றர் தொடரூந்து பாதையை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 January 2010
[படங்கள்] விழுப்புரத்தில் திருவேங்கடம்   வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த எழில்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் லூசியா  படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
9 January 2010
"எப்பவோ முடிந்த காரியம்'  என்பது யாழ்ப்பாணம், கொழும்புத்துறையின் தவசீலர் சிவயோக சுவாமிகள் உதிர்த்த நான்கு மகா வாக்கியங்களில் பிரதானமான ஒன்று. சித்தாந்திகளும், வேதாந்திகளும் இந்த வாக்கியங் களுக்குள் ஆழப் பொதிந்து கிடக்கும் உட்பொருள் குறித் துப் பல்வேறு விளக்கங்கள், வியாக்கியானங்களைத் தருவர். ஆனால் சாதாரண வாழ்வியலிலும் இது அதீத கருத்துருவைத் தந்து நிற்பது அவதானிக்கத்தக்து.
9 January 2010
அண்மையில் வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் கடற்படையினர் மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது என படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
9 January 2010
நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
9 January 2010
யாழ். சிறைச்சாலையில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.கஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
9 January 2010
திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது என்று உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
9 January 2010
[படங்கள்] தேசிய தலைவரின் வீரதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்,குள்ளன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (08-01-2010) மாலை 6.00 மணிக்கு நடை பெற்றன.
9 January 2010
[இணைப்பு] திரு. பழ. கோமதிநாயகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 9-1-2010 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை, எழும்பூர், 'இக்சா" மய்யத்தில் (அருங்காட்சியகம் எதிரில்) நடைபெற உள்ளது.
9 January 2010
கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழக்களுடன் தொடர்புகளை பேணவேண்டாம் என்று தமிழ் ஈழ அபிமானிகள் என்ற அமைப்பினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் வினியோகிக்கப்பட்டுவருகின்றது. ஆயுதக்குழுக்களை சாடி வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் எந்தவித இலட்சினையும் இடம்பெறவில்லை.
8 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு அயர்லாந்து தமிழர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.
8 January 2010
செய்யாத குற்றத்திற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பல்வேறான வகையில் மன உளைச்சல் மற்றும் காவற்துறையினர்களின் அடி உதைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியதாக லிமோசீன் (ஆடம்பர வாடகைக்கார்) ஓட்டுனரான எஸ்.இசைமணி (வயது 27) கண்ணீர் மல்க கூறினார்.
8 January 2010
புத்திமான்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துபேசிய பின்னரே எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்ததாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்த பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
8 January 2010
தமிழ் மக்களை வகைதொகையற்று அழித்து யுத்த வெற்றியில் மிதந்துபோயிருக்கிற தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டியுள்ளது.
8 January 2010
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிக் காணொளியானது உண்மையானதாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
8 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக