எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததுடன் அன்னாருக்கு எனது இதயம் கனத்த அஞ்சலியைச் செலுத்துவதுடன்
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நான்கு மணி நேர விடுமுறை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களை தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பிலுள்ள மகசீன் மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணா நிலைப்போராட்டம் தொடர்கின்றது. மகசீன் சிறைச்சாலையில் 90 கைதிகளும் திருகோணமலை சிறைச்சாலையில் 40 கைதிகளும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவருகின்றார்கள்.
வடக்கு பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 169851பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பனாகொட படை முகாமில் காலமானார் என்ற செய்தி கேட்டு கவலை அடைந்தோம். மே மாதத்தில் சிங்கள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வேலுப்பிள்ளையும் பக்கவாதத்தால் அவதிப்படும் அவரது துணைவியார் பார்வதியும் இந்நாள் வரை சட்டத்துக்கு முரணாக பனாகொட இராணுவ முகாமில் கொடிய இராசபக்சே அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தாரகள்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ளத் தமிழர்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களுக்கு விரோதமான சரத் பொன்சேகாவை த.தே.கூ ஆதரிக்கும் என்ற இந்த முடிவானது முற்றுமுழுதாக எதிர்பார்க்கப்படாத ஒன்று என்று கார்டியன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
[படங்கள் இணைப்பு] முழுமையாக மூன்று மாதங்களை எட்ட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்தோனேசியா, மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ தமிழ் ஏதிலிகள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள் வர்ணிக்கப்படமுடியாதவை.
தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது. வல்வெட்டித்துறையில் பிறந்து, தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த அப்பெருமகனார், அரசு அலுவலராகப் பணி ஆற்றிய நாள்களில், நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்.
வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை அனுப்ப முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவர் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிங்கத்திடம் ஒப்படைக்குமாறு அவரது மகள் வினோதினி இராஜேந்திரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை முடிவுக்கு வந்த இறுதிநாளில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.
"சட்டியைப் பார்த்துப் பானை கறுப்பு என்றதாம்" இப்படி ஒரு நகைச்சுவைப் பேச்சு நம்மத்தியில் உள்ளது. தேர்தல் செலவினங்கள் தொடர்பில் அரசுத் தரப்பில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் ஓர் அறிவிப்பு இந்த நகைச்சுவைப் பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டி நிற்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக