வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. விரிவு… »
கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
[படங்கள்] சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தமிழ் ஏதிலிகள் வகை தொகையின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச்சபை உலகளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றை அடுத்துவரும் ஒருவார காலத்துக்குத் தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ளது.
வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
சிறிலங்காவில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையவில்லை.
யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி தேவையில்லை என வடமாகாண ஆளுநர் அறிவித்த நிலையிலும் நேற்று பயணம் மேற்கொள்ளச் சென்ற பயணிகளிடம் படையினர் பாதுகாப்பு அனுமதி கேட்டுத் திருப்பி அனுப்பியதாகத் திரும்பி வந்த மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.
இலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை "லக்ருவணி மெதகம" என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய "இருதின" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது.
தமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது.
தாய் மொழி, தாயக மண், மூதாதையரின் வரலாறு-இம் மூன்றின் பதிப்பாகிய இன அடையாளங்கள் போன்றவை உயிரோடு ஒட்டியவை. இந்த உண்மையை – பொதுவுடைமை சீன அரசு உணர மறுத்து வருவதாலேயே, திபெத் பிரச்சினை அந்நாட்டுக்கு மிகப்பெரிய களங்கமாக சர்வதேச அரங்கில் நீடித்து வருகிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது.
'நாம்' மற்றும் 'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட ஆல்பம், சில புகைப்படங்கள் உட்பட சில சீருடைகள் மற்றும் சில செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் இலங்கை அரசினால் கொல்லப்பட்ட ஈழமக்களின் மனிதபேரவலங்களும் ஈழத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் அடங்கிய புகைப்படக் கண்காட்சி தமிழ்மக்களிற்கான மாநாடு மற்றும் ஆர்பாட்டம்.
நாங்கள் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமை குறித்து கடுமையாக தெரிவித்துவருவதன் காரணம் இன்று தமிழினத்துக்கு சார்பாக சர்வதேசத்தில் உருவாகிவரும் சூழலை நாம் பிரிந்து நிற்பதனால் இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தினாலாகும்.
தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார்.
மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆகின என்று எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது"என்று கூறியிருக்கிறார். பிஞ்சு குழந்தைகள் தலை,கால், கை என அங்கங்கள் சிதறுண்டு முடங்களாக கிடக்கும்போது,…
தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக