திங்கள், 23 நவம்பர், 2009

தமிழகத்தில் தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டி

LEADER_DAY_NAAMTAMILAR[படங்கள்] தமிழீழ தேசியத்தலைவர் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆகும் , அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர்.
23 November 2009
kopay1இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர்  நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது.
23 November 2009
ranil_fonsekaமுன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
23 November 2009
sivathampiஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
23 November 2009
Mahinda 121சிறீலங்காவின் ஐனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் முதற்பகுதியில் நடைபெறும் என்பதை சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்சே இன்று காலை அவரது கூட்டு அணியினருடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற அவசர சந்திப்பையடுத்து வெளியிட்டுள்ளார்.
23 November 2009
sarath_fonseka_sivilமுப்படைகளின் பிரதானியாகவிருந்து விலகி விட்டதால், சிறீலங்கா அரசாங்க வீட்டை உடனடியாக காலி செய்யும்படி சரத் பொன்சேகாவுக்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
23 November 2009
question-mark-artகுளிர்காலம் ஆரம்பித்தால் பனி சூழந்த மலைகள் சுவிசின் அழகை மேலும் அழகாக்கும். இப்போது இங்கே பனிகாலம் மக்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூரிச் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விருந்தினர் விடுதி வழமைக்கு மாறான பரப்புடன் காணப்படுகின்றது.
23 November 2009
pakistan-flag-urduபாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என சிறீலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
23 November 2009
sl budhdhistஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பெளத்த துறவி ஒருவர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வாரணா ரஜமகாவிகாரையைச் சேர்ந்த வண.பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக "ஜனசெத பெரமுன" என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
23 November 2009
chandana_sirimalwattaஜே.வி.பி ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகையின் பிரமத ஆசிரியர் இரகசிய பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
23 November 2009
ausi shipவெளிநாடுகளில் தங்கியிருந்து கொண்டு இலங்கையர்களை சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு அழைத்துச் செல்லும்  "சங்கிலி' என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா என்பவரை சிறீலங்கா பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அதிகாரிகளும் வெளிநாடுகளில் சல்லடை போட்டு தேடி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
23 November 2009
gun-firingஅநுராதபுரத்தின் டகையகம என்ற இடத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீஸ் கூறியது. இரு குழுக்களுக்கிடையிலான முரண்பாடே இந்த சம்பவத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
23 November 2009
sarath_fonsekaஅரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.
23 November 2009
airportசீனாவின் உதவியுடன் உலகில் மிகப்பெரிய விமானத்தளம் ஒன்று அம்பாந்தோட்டையில் நிர்மானிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
23 November 2009
tamileelam bankவடக்கு யுத்த நடவடிக்கைகளின் போது 650 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
23 November 2009
camp_barbwireவன்னி தடுப்பு முகாம்களில் இருந்து தமிழ் மக்கள் அனைவரையும் டிசம்பர் 1 ம் தேதி விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது அரசியல் சித்து விளையாட்டு என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
23 November 2009
lorry_foodதடுப்பு முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
23 November 2009
welikada_magazineதமிழ்க் கைதிகள் சிறையில் தாக்கப்பட்டு வருவது  சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வாகிப் போய் விட்டது என்பதற்கு கடந்த 13 ஆம் நாள் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நடந்த தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளது என மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
23 November 2009
UNO logoசிறீலங்கா அரசாங்கத்தால் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதாக வெளியிட்ட  அறிவிப்பை ஐநா வரவேற்றுள்ளது.
23 November 2009
mahinda_rajapakse_sஇந்திய சோதிடர்களின் ஆலோசனையைப் பெற சென்றிருக்கும் மெர்வின் சில்வா வரும்வரை காத்திருந்த மஹிந்த தேர்தல் அறிவிப்பை நாளை விடுகிறார்.
22 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக