செவ்வாய், 24 நவம்பர், 2009

இன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் (நவம்பர் 24)

navaneetham_pillai_UNOஇலங்கையின் யுத்தக் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். விரிவு… »


பிரதான செய்திகள்

27novநவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக  மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
24 November 2009
LEADER_DAY_NAAMTAMILAR[படம்] தமிழீழ தேசியத்தலைவர் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆகும் , அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர்.
23 November 2009
kopay1இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர்  நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது.
23 November 2009
sivathampiஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
23 November 2009


ஏனைய செய்திகள்

karunanidhiஇலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.
24 November 2009
UK-FLAGசிறீலங்காவில் மனிதாபிமான அமைப்புக்கள் அகதிகளுக்கான உதவிகளை வழங்க அனுமதி அளிக்கவேண்டும் என்று பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 November 2009
canada_heros_celeb_2009_s[படங்கள்] றயசன் தமிழ் மாணவர் மன்றம் தமது மாவீரர் நாள் 2009தை  தமிழீழ மண்ணுக்காய் மரணித்த மாவீரரை நினைவில் கொண்டு கார்த்திகை 23ம் திகதி மாலை சிறப்பாக நடாத்தியிருந்தனர். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்திற்கு கனேடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
24 November 2009
ABC-logoஅவுஸ்திரேலியாவை பொறுத்தவரை "தமிழ் ஏதிலிகளின்" பிரச்சினை பெரிய அளவில் அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் "தமிழர்களின்" பிரச்சினைகளை அவலங்களை பற்றி பேசாமல் தவிர்த்து வந்த முக்கியமான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்.
24 November 2009
france-flagபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பரிதி, நிதியாளர் ஜெயா ஆகியோருக்கு பிரான்ஸ் நீதி மன்றம் தலா 7வருடம், 4 வருடம் சிறை தண்டனைகளை வழங்கியுள்ளது.
24 November 2009
sl navyஇலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் நேற்று இரவு 60 தமிழர்களை ஏற்றிச்சென்ற  2 படகுகள் சிறீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
24 November 2009
john holmesயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத் தக்கது என்ற போதிலும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளின்  தரம் குறித்து உன்னிப்பதாக அவதானிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
24 November 2009
sri-kantha-and-sivanathan-kishor2பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோரும் நல்லதம்பி சிறிகாந்தாவும் அண்மைய காலங்களில் செயற்படுகின்றனர் என தமிழ் படைப்பாளிகள் கழகம் (ரொறன்ரோ) தெரிவித்துள்ளது.
24 November 2009
karuna தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் மீது புகார் கூறி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக மீண்டும் மு.கருணாநிதி  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
24 November 2009
pasil-rajapaksaஇலங்கையில் செயல்படும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் தொடர்புகளை பேண வேண்டாம் என வடக்கு அபிவிருத்திக்கான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
24 November 2009
SONALI-sunday leaderசண்டே லீடர் மற்றும் மோர்னிங் லீடர் பத்திரிகைகளின் ஆசிரியரான சோனாலி சமரசிங்க விக்ரமதுங்கவிற்கு சர்வதேச ஊடக விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
24 November 2009
Amnesty Logo - Global Identityஇலங்கையில் இருந்து புலம் பெயரும் ஏதிலிகள் குறித்து சர்வதேச சமூகம் உரிய அக்கறை செலுத்தவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
24 November 2009
BattiFortட்ரோலர் படகுகளின் மூலம் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த சில நபர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரேலியா போன்றதொரு நாட்டிற்கு படகு மூலம் குறித்த நபர்கள் பயணம் செய்ய எத்தனித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 November 2009
indo_shipஇந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ளவர்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
24 November 2009
Election 2010ஜனாதிபதித் தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவுறுத்தி உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க நேற்று நள்ளிரவு வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
24 November 2009
malaysia-flagமலேசியாவின் பாராளுமன்றத்தில் இலங்கை விடயம் குறித்து மிகக் காரசாரமான விவாதம் இன்று நடந்துள்ளது. இலங்கை அரசானது அகதிகளின் நலனின் அக்கறை காட்டவில்லை எனக் கூறி இந்திய சமூகத்துக்கு சார்பாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம்மை மலேசிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டிப் பேசியபோதே இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
23 November 2009
Medicinesஇந்திய நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஊசிமருந்துகள், சேலைன் போத்தல்கள் என்பவற்றுள் பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடித் துகள்கள் என்பன இருந்ததைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
23 November 2009
innercitypress_logoஹைட்டி நாடிற்கு ஐ.நா வின் சமாதானப் படையாக சென்றுள்ள சிறீலங்கா இராணுவத்தினர், பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என இன்டர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
23 November 2009
tamilnadu-tamileelam"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்"- – என்று உலக இலக்கியத்தின் உச்சியில் நின்று முழங்கிய நம் வள்ளுவனின் வாயில், கியூபாவையே தூக்கிப் போடலாம். அதன் பட்டப்பெயர் உலகின் சர்க்கரைக்கிண்ணம். ஆம். உலகிலேயே அதிகம் சர்க்கரை உற்பத்தியாவது அங்கேதான்.
23 November 2009
tn_protest22112009[படங்கள்] தமிழர்களின் சொந்த கடற்பரப்பு  கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் சிங்கள கடற்படையால் தொடர்ந்து சுட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமையில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர்முன்னணி  ஆகிய புரட்சிகர அமைப்புகள்  இணைந்து  திருவொற்றியூர்  பகுதில் பேரணி, பொதுக்கூட்டம்   நடத்தினர்.
23 November 2009

--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக